பொது செய்தி

தமிழ்நாடு

சனத்குமார் நதியில் வெள்ளம்: மூழ்கிய தரைப்பாலம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் பெய்த கனமழையால், சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை துவங்கி ?நேற்று அதிகாலை வரை, 99 மி.மீ., மழை பதிவானது. அதனால், சனத்குமார் நதியில் நேற்று அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அடவிசாமிபுரம் தரைப்பாலம்

ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் பெய்த கனமழையால், சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை துவங்கி ?நேற்று அதிகாலை வரை, 99 மி.மீ., மழை பதிவானது. அதனால், சனத்குமார் நதியில் நேற்று அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அடவிசாமிபுரம் தரைப்பாலம் நீரில் மூழ்கி, வெங்கடாபுரம், அடைக்கலாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், 5 கி.மீ., சுற்றிக்கொண்டு பென்னங்கூர் வழியாக வாகன ஓட்டிகள் சென்றனர். சிலர் ஆபத்தை உணராமல் நடந்தும், டூவீலரிலும் பாலத்தை கடந்தனர். தளி பி.டி.ஓ., விமல்ரவிக்குமார், ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். மதியம், 1:00 மணிக்கு பின் வெள்ளம் வடிந்து போக்குவரத்து சீரானது. அதேபோல், அஞ்செட்டியில் தொடர் மழையால், தொட்டல்லா ஆற்றில் வெள்ளம் சென்றது. தளி அடுத்த பேளூர் ஏரி, பண்டேஸ்வரத்திலுள்ள பாபுராஜன் ஏரி, 60 சதவீதம் நிரம்பிய நிலையில், மதகில் நேற்று ஏற்பட்ட நீர்கசிவை மணல் மூட்டைகளை வைத்து அதிகாரிகள் சரிசெய்தனர். தேன்கனிக்கோட்டையில் கனமழையால், அந்தேவனப்பள்ளி, கெலமங்கலம், ராயக்கோட்டை சுற்று வட்டாரத்தில், 26 வீடுகள் நேற்று இடிந்து விழுந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X