சுங்கச்சாவடி கட்டண பிரச்னைக்கு முடிவு; அரசு பஸ் கண்டக்டர்கள் செலுத்த உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுங்கச்சாவடி கட்டண பிரச்னைக்கு முடிவு; அரசு பஸ் கண்டக்டர்கள் செலுத்த உத்தரவு

Added : நவ 15, 2021
Share
சுங்கச்சாவடிகளில் கட்டண பிரச்னையால் அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க, 'பாஸ்ட்ரேக்' வேலை செய்யாத நிலையில், கண்டக்டர்களே பணம் செலுத்த அனுமதி அளித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இதுகுறித்து, எஸ்.இ.டி.சி.,யின் வணிக பொது மேலாளர் குணசேகரன் அனுப்பிய சுற்றறிக்கை: சுங்கச்சாவடிகளில் பஸ்களில் ஒட்டப்பட்ட, 'பாஸ்ட்ரேக் ஸ்டிக்கர்' சரியாக, 'ஸ்கேன்' ஆகாதது; 'சர்வர்'

சுங்கச்சாவடிகளில் கட்டண பிரச்னையால் அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க, 'பாஸ்ட்ரேக்' வேலை செய்யாத நிலையில், கண்டக்டர்களே பணம் செலுத்த அனுமதி அளித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுகுறித்து, எஸ்.இ.டி.சி.,யின் வணிக பொது மேலாளர் குணசேகரன் அனுப்பிய சுற்றறிக்கை: சுங்கச்சாவடிகளில் பஸ்களில் ஒட்டப்பட்ட, 'பாஸ்ட்ரேக் ஸ்டிக்கர்' சரியாக, 'ஸ்கேன்' ஆகாதது; 'சர்வர்' பிரச்னையால், 'டிபாசிட் வாலட்'டுக்கு தொகை மாறுதல் நடக்காதது போன்றவையால், பயணியருக்கும், போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதுபோன்ற பிரச்னையின்போது கண்டக்டர்களே, சுங்க கட்டணம் செலுத்தி பஸ்களை இயக்க வேண்டும். பின், பஸ், தடம் எண், சுங்க கட்டண விபரத்தை கிளை மேலாளர், வணிக பிரிவுக்கு தபால், வாட்ஸ்ஆப் மூலம் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். விரைவு போக்குவரத்து உத்தரவை, பிற போக்குவரத்துக்கழகங்களும் பின்பற்ற, அந்த கோட்ட வணிக பொது மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X