சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழுத்து அறுத்து மாற்றுத்திறனாளி கொலை

Added : நவ 15, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: கலவை அருகே, கழுத்து அறுத்து மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே டி.புதூரை சேர்ந்தவர் குமார், 50. மாற்றுத்திறனாளியான இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது முதல் மனைவி சுமதி, 38, சென்னையில் வசித்து வருகிறார். இரண்டாவது மனைவி ரேகாவுடன், 38, தற்போது வசித்து வந்தார். முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவிக்கு நான்கு

ராணிப்பேட்டை: கலவை அருகே, கழுத்து அறுத்து மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே டி.புதூரை சேர்ந்தவர் குமார், 50. மாற்றுத்திறனாளியான இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது முதல் மனைவி சுமதி, 38, சென்னையில் வசித்து வருகிறார். இரண்டாவது மனைவி ரேகாவுடன், 38, தற்போது வசித்து வந்தார். முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவிக்கு நான்கு மகன்கள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கும் உள்ள குமார், நேற்று காலை அகரம் கிராமத்தில் கள்ளத்தனமாக விற்பவரிடம் சென்று, ஆறு மது பாட்டில்களை வாங்கி வந்து, அங்குள்ள ஏரிக்கரையில் குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் மதியம், 2:00 மணிக்கு ஏரிக்கரை அருகே அவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. கலவை போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், கழுத்து அறுக்கப்பட்டு, வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கலவை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X