சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
வேலூர்: வேலூர் மாவட்டம், கத்தாரிகுப்பத்தை சேர்ந்தவர் சுதாகர், 35, விவசாயி. இவர் மனைவி பவித்ரா, 30. இவர்களுக்கு ரித்திக்ரோஷன், 5, யுவன்ஸ்ரீ, 2, என்ற இரு மகன்கள் உள்ளனர். தொடர் மழையால் அங்குள்ள உத்தரகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்தில் அதிகளவு தண்ணீர் சென்றது. அப்பகுதி மக்கள் ஒடுக்கத்தூர் செல்ல, உத்தரகாவிரி தரைப்பாலத்தை கடந்து தான் போக முடியும். கடந்த, 12ல்,

வேலூர்: வேலூர் மாவட்டம், கத்தாரிகுப்பத்தை சேர்ந்தவர் சுதாகர், 35, விவசாயி. இவர் மனைவி பவித்ரா, 30. இவர்களுக்கு ரித்திக்ரோஷன், 5, யுவன்ஸ்ரீ, 2, என்ற இரு மகன்கள் உள்ளனர். தொடர் மழையால் அங்குள்ள உத்தரகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்தில் அதிகளவு தண்ணீர் சென்றது. அப்பகுதி மக்கள் ஒடுக்கத்தூர் செல்ல, உத்தரகாவிரி தரைப்பாலத்தை கடந்து தான் போக முடியும். கடந்த, 12ல், மளிகை பொருட்கள் வாங்க பவித்ரா, தன் இரு குழந்தைகளை இடுப்பில் தூக்கிக் கொண்டு தரைப்பாலத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, அதிக தண்ணீர் வந்ததால், ரித்திக்ரோஷன் ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டார். ஒடுக்கத்தூர் தீயணைப்பு வீரர்கள் தேடியும் சிறுவனை மீட்க முடியவில்லை. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தேசிய பேரீடர் மீட்பு படை வீரர்கள், ரப்பர் படகு மூலம் ஆற்றில் தேடி ரித்திக்ரோஷன் சடலத்தை, மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X