சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலையில் இருந்து பாறை உருண்டு வீட்டில் விழுந்ததில் பெண் பலி

Added : நவ 15, 2021
Share
Advertisement
வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில், மலையில் இருந்து பாறை உருண்டு வீட்டின் மீது விழுந்ததில், பெண் ஒருவர் இறந்தார். வடகிழக்கு பருவமழை, வேலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகில் காகிதப்பட்டரை என்ற பகுதி உள்ளது. இங்குள்ள மலையிலும், மலையடிவாரத்திலும், 300க்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். மழை

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில், மலையில் இருந்து பாறை உருண்டு வீட்டின் மீது விழுந்ததில், பெண் ஒருவர் இறந்தார். வடகிழக்கு பருவமழை, வேலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகில் காகிதப்பட்டரை என்ற பகுதி உள்ளது. இங்குள்ள மலையிலும், மலையடிவாரத்திலும், 300க்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். மழை காலங்களில் மலையில் இருந்து பாறைகள் உருண்டு விழுவது வழக்கம். நேற்று மாலை, 4:00 மணிக்கு பெரிய பாறை ஒன்று உருண்டு வந்து, அங்கிருந்த ஒரு வீட்டில் விழுந்தது. இதில் அந்த வீடு நொறுங்கி அங்கு வசித்து வந்த கூலித்தொழிலாளி பிச்சாண்டி, 55, அவர் மனைவி ரமணி, 50, மகள் நிஷா, 20, ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். சிறிது நேரத்தில் மேலும் பல சிறிய பாறைகள் உருண்டு வந்து மரங்களில் மோதி நின்றன. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எஸ்.பி., செல்வகுமார், தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர். பிரமாண்டமான பாறை என்பதால், வெடி வைத்து தான் உடைக்க முடியும். அதற்கு இப்பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற வேண்டும். ஏராளமான வீடுகள் சேதம் ஏற்படும் என்பதால் போலீசார் திணறினர். அப்போது, பாறையின் கீழ் இருந்து பெண் குரல் கேட்டது. அந்த இடத்தில் சிறிது பள்ளம் தோண்டி படுகாயமடைந்த ரமணி என்ற பெண்ணை மீட்டனர். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்தார். அரக்கோணத்திலிருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், பாறையின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் எத்தனை பேர் பாறைகளில் சிக்கியிருக்கிறார்கள் என்ற விபரத்தை வருவாய்த்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X