சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்தவர் கைது

Added : நவ 15, 2021
Share
Advertisement
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்தவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பத்தை சேர்ந்தவர் வாசு, 22. இவர் ராமநாயக்கன்பேட்டையில் பிரியாணி கடையில் சர்வராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னை திருமணம் செய்து

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்தவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பத்தை சேர்ந்தவர் வாசு, 22. இவர் ராமநாயக்கன்பேட்டையில் பிரியாணி கடையில் சர்வராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதற்கு மாணவி மறுத்துள்ளார். கடந்த, 15ல் மாணவியை காரில் கடத்திச் சென்று, ஆந்திரா மாநிலம், திருப்பதியில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். புகார்படி அம்பலூர் போலீசார், கோவை குனியமுத்தூரில் பதுங்கியிருந்த வாசுவை கைது செய்து மாணவியை மீட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்பட்டார். அம்பலூர் போலீசார், போக்சோவில் வாசுவை நேற்று கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X