வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

Added : நவ 15, 2021
Share
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, தரைப்பாலத்தை சைக்கிளில் கடக்க முயன்றவர், வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அத்திமூரை சேர்ந்தவர் முனியப்பன், 56, இவரது தங்கை, போளூர் அடுத்த அரும்பலூரில் வசித்து வருகிறார். இவரை பார்க்க சைக்கிளில், நேற்று முனியப்பன் சென்றார். அப்போது அரும்பலூரில் உள்ள தரைப்பாலத்தை கடக்க

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, தரைப்பாலத்தை சைக்கிளில் கடக்க முயன்றவர், வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அத்திமூரை சேர்ந்தவர் முனியப்பன், 56, இவரது தங்கை, போளூர் அடுத்த அரும்பலூரில் வசித்து வருகிறார். இவரை பார்க்க சைக்கிளில், நேற்று முனியப்பன் சென்றார். அப்போது அரும்பலூரில் உள்ள தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது, தரைப்பாலத்தின் மீது ஓடிய வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். போளூர் தீயணைப்பு துறையினர் அவரை சடலமாக மீட்டனர். போளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X