பொது செய்தி

தமிழ்நாடு

நவ., 17 முதல் திருவண்ணாமலை வருவதை தவிர்க்க வேண்டும்: எஸ்.பி.,

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு வரும், 17 முதல், 20 வரை கிரிவலம் செல்லவும், கோவிலில் சுவாமி தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளி மாநிலம், வெளி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலை வருவதை தவிர்க்க வேண்டும் என, எஸ்.பி., பவன்குமார் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், முக்கிய விழாவான கார்த்திகை தீப திருவிழா கடந்த, 10ல்,

திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு வரும், 17 முதல், 20 வரை கிரிவலம் செல்லவும், கோவிலில் சுவாமி தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளி மாநிலம், வெளி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலை வருவதை தவிர்க்க வேண்டும் என, எஸ்.பி., பவன்குமார் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், முக்கிய விழாவான கார்த்திகை தீப திருவிழா கடந்த, 10ல், கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. வரும், 19ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக வரும், 17, மதியம், 1:00 முதல், 20 வரை கிரிவலம் செல்லவும், கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி மறுத்தும், ஏற்கனவே கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வரும், 17 முதல், 20 வரை வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் திருவண்ணாமலை வருவதை தவிர்க்க வேண்டும் என, எஸ்.பி., பவன்குமார் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவண்ணாமலை ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வருவதால், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X