பழங்குடியினரை ஓட்டுவங்கிக்காக பயன்படுத்திய காங்.,; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
போபால்: நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, பழங்குடியினரை ஓட்டு வங்கிக்காக பயன்படுத்தியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளான இன்று (நவ.,15), ஜன்ஜாதிய கவுரவ் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ராஞ்சியில் பிர்சா முண்டாவின் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி
PM Modi, Tribals, VoteBank, Congress, பிரதமர் மோடி, பழங்குடியினர், ஓட்டுவங்கி, காங்கிரஸ்

போபால்: நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, பழங்குடியினரை ஓட்டு வங்கிக்காக பயன்படுத்தியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளான இன்று (நவ.,15), ஜன்ஜாதிய கவுரவ் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ராஞ்சியில் பிர்சா முண்டாவின் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் ஜன்ஜாதிய கவுரவ் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பழங்குடி சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவின் கலாசாரத்தை வலுப்படுத்துவதில் அவர்களுக்கு பெரிய பங்கு உண்டு.


latest tamil news


பழங்குடியினர்களின் சாதனைகளை எதிர்க்கட்சியினர் வெளியில் சொல்லவில்லை. அனைத்தையும் மூடி மறைத்துவிட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் தங்கள் சுயநல அரசியலுக்கு முன்னுரிமை அளித்ததால் தான் இப்படியெல்லாம் நடந்தது. பழங்குடியினரின் கலாசாரம் மற்றும் திறன் ஆகியவை புறக்கணிக்கப்பட்டன. பழங்குடியினர் தான் நாட்டின் உண்மையான ஹீரோக்கள்.

முன்னாள் இருந்த காங்கிரஸ் அரசு ஓட்டுவங்கிக்காக மட்டுமே பழங்குடியினர்களை பயன்படுத்தியது. அவர்களுக்கு எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் இருந்தன. நாங்கள் பழங்குடி மக்களை கொண்டாடுவதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு பழங்குடியினரின் நலன் பற்றி கவலையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
15-நவ-202121:30:56 IST Report Abuse
sankar மோடிக்கு பழங்குடியினர் மேல் அவ்வளவு பாசமா. ஆஹா.
Rate this:
Cancel
செந்தமிழ் அரசு இன்னமும் எத்தனை நாட்களுக்குத்தான் காங்கிரஸ் மேல் பழியைப் போட்டுத் தப்பிக்க முடியும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
15-நவ-202117:51:52 IST Report Abuse
M  Ramachandran சரியான கருத்து . இப்பொ உண்மை தெரிந்து மக்கள் அவ்ர்களை புறம் தள்ளி விட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X