பொது செய்தி

இந்தியா

கர்தாபூர் சாலையை திறந்து விட பிரதமர் மோடியிடம் கோரிக்கை

Added : நவ 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : பஞ்சாப் மாநில பா.ஜ., தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் நேற்று சந்தித்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கர்தாபூர் சாலையை திறந்து விடும்படி வேண்டுகோள் விடுத்தனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது கர்தாபூர் நகரம். சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் நினைவிடமான 'தர்பார் சாஹிப்' என்ற குருத்வாரா
 கர்தாபூர் சாலையை திறந்து விட பிரதமர் மோடியிடம் கோரிக்கை

புதுடில்லி : பஞ்சாப் மாநில பா.ஜ., தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் நேற்று சந்தித்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கர்தாபூர் சாலையை திறந்து விடும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது கர்தாபூர் நகரம். சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் நினைவிடமான 'தர்பார் சாஹிப்' என்ற குருத்வாரா இங்கு அமைந்துள்ளது. இந்த குருத்வாராவுக்கு சென்று வழிபாடு செய்வது சீக்கியர்களின் முக்கியக் கடமை.இந்தியாவில் இருந்து பாகிஸ்தானில் உள்ள கர்தாபூர் குருத்வாராவுக்கு 4.7 கி.மீ., சாலை 2019ல் அமைக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 மார்ச்சில் இந்த சாலை மூடப்பட்டது.வரும் 19ல் குருநானக் தேவ் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கர்தாபூருக்கு செல்ல பஞ்சாப், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் சீக்கியர்கள் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், பஞ்சாப் மாநில பா.ஜ., தலைவர்கள் நேற்று டில்லி சென்றனர். பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து, கர்தாபூர் சாலையை திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-நவ-202109:01:28 IST Report Abuse
பேசும் தமிழன் நேரு மற்றும் காந்தி கூட்டு சதியால்.... சீக்கியர்களின் புனித இடம்... பாகிஸ்தான் வசம் சென்று விட்டது.. அந்த இருவருக்கும் நாட்டை பிரித்து சென்ற முஸ்லீம்கள் மீது தான் அக்கறை இருந்துள்ளது.. அதனால் தான் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது இவர்கள் இருவரும் முஸ்லீம் ஆதரவு நிலைபாட்டை எடுத்தார்கள்.. அப்பாவி இந்து மக்கள் கொலை செய்யப்பட்டும் இந்து பெண்கள் கற்பழிக்க பட்ட போதும்... காந்தி அவர்கள் நக்கலாக மாற்று மதத்தவர்கள் கற்பழித்த இந்து பெண்களை இந்து இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயல் போல் செய்தார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X