அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹஜ் பயண அனுமதி பிரதமருக்கு கடிதம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சென்னை : 'சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள, மீண்டும் அனுமதி வழங்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.கடிதம் வருமாறு:நாடு முழுதும் ஹஜ் பயணியருக்காக, 21 இடங்களில் இருந்து விமான பயண முறை செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அதை ௧௦ ஆக குறைத்து, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி

சென்னை : 'சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள, மீண்டும் அனுமதி வழங்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதம் வருமாறு:
நாடு முழுதும் ஹஜ் பயணியருக்காக, 21 இடங்களில் இருந்து விமான பயண முறை செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அதை ௧௦ ஆக குறைத்து, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த, ஹஜ் பயணியர்சென்னையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் இருந்து செல்ல வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹஜ் பயணம் செல்வோர் சிரமப்பட நேரிடும். எனவே, ஹஜ் பயண விவகாரத்தில் ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர, சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X