பொது செய்தி

இந்தியா

99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021
Share
Advertisement
புதுடில்லி: அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த தடுப்பூசி சான்றிதழ்கள் அல்லது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களை
India Allows, QuarantineFree Entry, Travellers, 99 Countries, Covid19

புதுடில்லி: அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த தடுப்பூசி சான்றிதழ்கள் அல்லது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிப்பது தொடர்பாக இந்தியா மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் இட்டுள்ளன. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியினை முழுமையாக செலுத்திய நபர்கள் ஒப்பந்தத்தில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news


அந்த வகையில், 99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதில்லை. மாறாக, இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் பரிசோதனையின் எதிர்மறை சான்றிதழை மத்திய அரசின் ஏர் சுவீதா போர்டலில் பதிவேற்ற வேண்டும். இந்தியா வந்ததும் அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்காமல், 14 நாட்களுக்கு அவர்களின் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


99 நாடுகள்:



latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X