அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் கோவிலில் விதிமுறை மீறல்: பா.ஜ., மாநில தலைவர் மீது புகார்

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருச்சி : ஸ்ரீரங்க, ரெங்கநாதர் கோவிலில் விதிமுறைகளை மீறி, அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்திய பா.ஜ., கட்சியின் மாநில தலைவர், கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2013ல், உத்தர்காண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், கேதார்நாத்தில் இருந்த ஆதி சங்கராச்சாரியார் சமாதி சிதிலமடைந்தது. அதனை புனரமைப்பு செய்து, கடந்த 5ம் தேதி, பிரதமர் மோடி நாட்டுக்கு

திருச்சி : ஸ்ரீரங்க, ரெங்கநாதர் கோவிலில் விதிமுறைகளை மீறி, அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்திய பா.ஜ., கட்சியின் மாநில தலைவர், கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2013ல், உத்தர்காண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், கேதார்நாத்தில் இருந்த ஆதி சங்கராச்சாரியார் சமாதி சிதிலமடைந்தது. அதனை புனரமைப்பு செய்து, கடந்த 5ம் தேதி, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதையொட்டி, தமிழகத்தில் ஆதி சங்கராச்சாரியார் வழிபட்ட ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உட்பட, 16 கோவில் தலங்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அன்றைய தினம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர், கடந்த 11ம் தேதி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது, ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில், கடந்த நவம்பர், 5ம் தேதி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், தாயார் சன்னதி முன் உள்ள கருத்துரை மண்டபத்தில், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உதவியுடன், பா.ஜ., கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளை மீறி, அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தி, பெரிய எல்.சி.டி., திரை அமைத்து, கேதார்நாத்தில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்தனர். இதை தவறு என்று சுட்டிக்காட்டியதால், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரெங்கராஜன் நரசிம்மன் வெளியிட்ட வீடியோவும், சமூக வலைதலங்களில் வைரலானது. இந்நிலையில், 'ஸ்ரீரங்கம் கோவில் கருத்துரை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நான் பங்கேற்றதில் எவ்வித விதி மீறலும் இல்லை' என்று, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X