பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை

Added : நவ 15, 2021
Share
Advertisement
மேட்டூர் : மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், 40 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., ஆகும். நேற்று முன்தினம் மாலை அணை நீர்மட்டம் 119.40 அடியாக இருந்தது. வினாடிக்கு 22 ஆயிரம் கன அடிநீர் வந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதிகாலை 1:00 மணிக்கு
 நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை

மேட்டூர் : மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், 40 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., ஆகும். நேற்று முன்தினம் மாலை அணை நீர்மட்டம் 119.40 அடியாக இருந்தது. வினாடிக்கு 22 ஆயிரம் கன அடிநீர் வந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதிகாலை 1:00 மணிக்கு அணையில் இருந்து முதல் கட்டமாக 24 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

மேட்டூர் அணை சுரங்க மின் நிலையங்கள் வழியாக, வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றலாம். சுரங்க மின் நிலையத்தில் ஒரு அலகு பழுதடைந்து இருந்ததால், நேற்று காலை மின் நிலையங்கள் வழியாக, 17 ஆயிரம் கன அடி, 16 கண் மதகுகள் வழியாக 11 ஆயிரம் கன அடி என 28 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

நேற்று மதியம் 2:00 மணிக்கு நீர் வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. மின் நிலைய அலகில் கோளாறும் சரியானது. இதனால் மின் நிலையங்கள் வழியாக 22 ஆயிரம் கன அடி, 16 கண் மதகுகள் வழியாக 18 ஆயிரம் கன அடி என, 40 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணை கட்டி, 88 ஆண்டுகளான நிலையில் 41வது முறையாக நிரம்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X