சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது குடித்து மூவர் உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம்; ஒருவர் கைது

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை: கோவை, பாப்பநாயக்கன்பாளையம் அருந்ததியர் வீதியை சேர்ந்தவர்கள் பார்த்தீபன்,31, சக்திவேல்,60, மற்றும் முருகானந்தம்,55. பார்த்தீபன், சக்திவேல் இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வந்தனர். முருகானந்தம் சமையல்காரராக பணியாற்றி வந்தார். தென்காசியை சேர்ந்த முருகானந்தம், தொழில் நிமித்தமாக கோவையில் தங்கி இருந்ததில் மற்ற இருவருடன் பழகி நண்பராகியுள்ளார். இவர்கள் மூவரும்

கோவை: கோவை, பாப்பநாயக்கன்பாளையம் அருந்ததியர் வீதியை சேர்ந்தவர்கள் பார்த்தீபன்,31, சக்திவேல்,60, மற்றும் முருகானந்தம்,55. பார்த்தீபன், சக்திவேல் இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வந்தனர். முருகானந்தம் சமையல்காரராக பணியாற்றி வந்தார். தென்காசியை சேர்ந்த முருகானந்தம், தொழில் நிமித்தமாக கோவையில் தங்கி இருந்ததில் மற்ற இருவருடன் பழகி நண்பராகியுள்ளார். இவர்கள் மூவரும் தீபாவளி தினத்தன்று அதிகளவு மது அருந்தி உயிரிழந்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் மதுவுடன் பெயின்ட் அடிக்க பயன்படும் தின்னரை கலந்து குடித்தது தெரியவந்தது.

இச்சூழலில் போலீசாரின் தொடர் விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த ராஜசேகர்,63, என்பவர் இவர்களுக்கு மதுவில் தின்னரை கலந்து கொடுத்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X