பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த விழுப்புரம் தளவானூர் தடுப்பணை வெடி வைத்து தகர்ப்பு

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தளவானூர் தடுப்பணை சேதமடைந்ததை அடுத்து, அந்த தடுப்பணை வெடி வைத்து தகர்க்கப்பட்டது.விழுப்புரம் அருகிலுள்ள தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலத்திற்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் தளவானூர்
தளவானூர், தடுப்பணை, வெடி, தகர்ப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தளவானூர் தடுப்பணை சேதமடைந்ததை அடுத்து, அந்த தடுப்பணை வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

விழுப்புரம் அருகிலுள்ள தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலத்திற்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் தளவானூர் பகுதியில் தடுப்பணையின் ஒருபகுதி முற்றிலுமாக உடைந்து சேதமடைந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேறியது. இதனால் ஆற்றின் கரையோரப்பகுதி சேதமடைந்து வந்தன. இதையடுத்து பொதுப்பணி துறை (நீர்வளம்) பிரிவு அதிகாரிகள், அணையை பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி தகர்க்க முயற்சி செய்தனர்.


latest tamil news


நேற்று (நவ.,14) சுமார் 100 ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி அணையை வெடிக்கச் செய்தனர். ஆனாலும் சேதமடைந்த பகுதி எதிர்பார்த்த அளவுக்கு வெடித்து சிதறாததால், இன்றும் வெடி வைத்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், தடுப்பணை முற்றிலுமாக தகர்க்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு முன்னதாக அப்பகுதியில் மக்கள் கூடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Perumal - Chennai,இந்தியா
15-நவ-202119:52:45 IST Report Abuse
Perumal you have to cry like this for another twenty years.
Rate this:
Cancel
15-நவ-202119:09:14 IST Report Abuse
அப்புசாமி அடப்பாவிங்களா.... இப்பிடி ஒரு தடுப்பணை கட்டி ஆட்டையப்போட்டீங்களேடா... உங்களை எல்லாம் ஒரு கோர்ட்டும் கேள்வி கேக்காது. ஒன்றிய அரசும் கண்டுக்காது. தெய்வமா பாத்து உங்களை தண்டிச்சாத்தான் உண்டு.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
15-நவ-202118:41:01 IST Report Abuse
தியாகு அடுத்த அணை கட்ட கட்டுமரம் கருனாநிதியின் திருட்டு திமுக அல்லக்கைகள் யாருக்காவது மீண்டும் டெண்டர் விடப்படும். அதில் கோபாலபுரம் கமிஷன் எவ்வளவுதான்னு தெரியல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X