சேதமடைந்த விழுப்புரம் தளவானூர் தடுப்பணை வெடி வைத்து தகர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த விழுப்புரம் தளவானூர் தடுப்பணை வெடி வைத்து தகர்ப்பு

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (3)
Share
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தளவானூர் தடுப்பணை சேதமடைந்ததை அடுத்து, அந்த தடுப்பணை வெடி வைத்து தகர்க்கப்பட்டது.விழுப்புரம் அருகிலுள்ள தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலத்திற்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் தளவானூர்
தளவானூர், தடுப்பணை, வெடி, தகர்ப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தளவானூர் தடுப்பணை சேதமடைந்ததை அடுத்து, அந்த தடுப்பணை வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

விழுப்புரம் அருகிலுள்ள தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனதிரிமங்கலத்திற்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் தளவானூர் பகுதியில் தடுப்பணையின் ஒருபகுதி முற்றிலுமாக உடைந்து சேதமடைந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேறியது. இதனால் ஆற்றின் கரையோரப்பகுதி சேதமடைந்து வந்தன. இதையடுத்து பொதுப்பணி துறை (நீர்வளம்) பிரிவு அதிகாரிகள், அணையை பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி தகர்க்க முயற்சி செய்தனர்.


latest tamil news


நேற்று (நவ.,14) சுமார் 100 ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி அணையை வெடிக்கச் செய்தனர். ஆனாலும் சேதமடைந்த பகுதி எதிர்பார்த்த அளவுக்கு வெடித்து சிதறாததால், இன்றும் வெடி வைத்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், தடுப்பணை முற்றிலுமாக தகர்க்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு முன்னதாக அப்பகுதியில் மக்கள் கூடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X