சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் விழுந்த பாறை: பெண் பரிதாப பலி

Added : நவ 15, 2021
Share
Advertisement
வேலுார் : வேலுார் கலெக்டர் அலுவலகம் அருகில், மலையில் இருந்து பாறை உருண்டு வீட்டின் மீது விழுந்ததில், ஒரு பெண் உயிரிழந்தார்.வேலுார் மாவட்டத்தில், வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வேலுார் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகில் காகிதப்பட்டறை என்ற பகுதி உள்ளது. இங்குள்ள மலையிலும், அடிவாரத்திலும், 300க்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் கட்டி வசித்து
 வீட்டில் விழுந்த பாறை: பெண் பரிதாப பலி

வேலுார் : வேலுார் கலெக்டர் அலுவலகம் அருகில், மலையில் இருந்து பாறை உருண்டு வீட்டின் மீது விழுந்ததில், ஒரு பெண் உயிரிழந்தார்.

வேலுார் மாவட்டத்தில், வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வேலுார் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகில் காகிதப்பட்டறை என்ற பகுதி உள்ளது. இங்குள்ள மலையிலும், அடிவாரத்திலும், 300க்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.மழை காலங்களில் மலையில் இருந்து சிறுசிறு பாறைகள் உருண்டு விழுவது வழக்கம்.

நேற்று மாலை, 4:00 மணிக்கு பெரிய பாறை ஒன்று உருண்டு வந்து, அங்கிருந்த ஒரு வீட்டில் விழுந்தது.இதில் அந்த வீடு நொறுங்கி, அங்கு வசித்து வந்த கூலித்தொழிலாளி பிச்சாண்டி, 55, அவர் மனைவி ரமணி, 50, மகள் நிஷா, 20, ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர். சிறிது நேரத்தில், மேலும் பல சிறிய பாறைகள் உருண்டு வந்து மரங்களில் மோதி நின்றன.கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எஸ்.பி., செல்வகுமார், தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர்.

பிரம்மாண்டமான பாறை என்பதால், வெடி வைத்து தான் உடைக்க முடியும். அப்பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற வேண்டும். ஏராளமான வீடுகள் சேதமாகும் என்பதால் போலீசார் திணறினர்.அப்போது, பாறையின் கீழ் இருந்து பெண் குரல் கேட்டது. அந்த இடத்தில் சிறிது பள்ளம் தோண்டி, படுகாயமடைந்த ரமணியை மீட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் இறந்தார். அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், பாறையின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலாற்றில் 7 பேர் மீட்பு
ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அடுத்த மாமண்டூரைச் சேர்ந்த 18 - 20 வயதுடைய ஏழு வாலிபர்கள் நேற்று காலை 9:00 மணிக்கு, மாமண்டூர் பாலாற்றில் குளித்தனர். அப்போது திடீரென வந்த வெள்ளத்தால், அவர்கள் 3 கி.மீ., துாரத்தில் உள்ள திட்டு போன்ற பகுதிக்கு அடித்து செல்லப்பட்டனர்.தாங்கள் ஒதுங்கியுள்ள திட்டும் மூழ்கும் அபாயத்தில் இருப்பதால், தங்களை காப்பாற்றும்படி கலெக்டர் அலுவலகத்திற்கு மொபைல் போனில் கதறினர்.

கைத்தறி துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி., தீபா சத்யன், தீயணைப்பு வீரர்களுடன் அங்கு வந்தனர்.அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த, 20 பேர் ஆறு ரப்பர் படகுகள் வாயிலாக திட்டு பகுதிக்கு சென்றபோது, ஏழு பேரும் மயங்கி கிடந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளித்து, படகில் ஏற்றி மாலை, 5:30 மணிக்கு கரைக்கு அழைத்து வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X