143 ரயில்வே ஸ்டேஷன்களில் குழந்தை பாதுகாப்பு மையம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
மதுரை : நாட்டில் 143 ரயில்வே ஸ்டேஷன்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் செயல்படுவதாக மதுரையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடந்த குழந்தைகள் பாதுகாப்புவிழிப்புணர்வு வார விழாவில் கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இக்கோட்டத்தில் மதுரை, ராமேஸ்வரம், துாத்துக்குடி உள்ளிட்ட முக்கிய ஸ்டேஷன்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.

மதுரை : நாட்டில் 143 ரயில்வே ஸ்டேஷன்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் செயல்படுவதாக மதுரையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடந்த குழந்தைகள் பாதுகாப்புவிழிப்புணர்வு வார விழாவில் கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:
இக்கோட்டத்தில் மதுரை, ராமேஸ்வரம், துாத்துக்குடி உள்ளிட்ட முக்கிய ஸ்டேஷன்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. வீட்டுக்கு தெரியாமல்,கோபித்து கொண்டு ரயில்களில் வரும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள் ஆகியோரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளன. குழந்தைகள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 ல் தெரிவிக்கலாம். நுாற்றுக்கணக்கான குழந்தைகள் இதுபோல மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர், என்றார்.

குழந்தைகளின் கைகளில் விழிப்புணர்வு பட்டையையும் அணிவித்தார்.கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல்.கணேஷ், குழந்தைகள் காப்பக ஒருங்கிணைப்பாளர் அனிதா, துணை ரயில்வேநிலைய மேலாளர்கள் பிரபாகர், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X