பொது செய்தி

தமிழ்நாடு

அட்டவணைப்படி இனி ரயில் இயக்கம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருப்பூர் : ரயில்வே வாரிய அறிவிப்பை தொடர்ந்து, 159 தினசரி, 134 வாரந்திர ரயில் என, 293 ரயில்களின் இயக்கத்தை அட்டவணைப்படி தெற்கு ரயில்வே துவக்கியுள்ளது.நாடு முழுவதும், கொரோனா பரவல் தணிந்துள்ளதால், அட்டவணையில் உள்ள படி அனைத்து ரயில்களையும் இயக்குவதற்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் இயங்கிவந்த, 1,700 சிறப்பு ரயில் மீண்டும் பழைய முறையில், இயங்க

திருப்பூர் : ரயில்வே வாரிய அறிவிப்பை தொடர்ந்து, 159 தினசரி, 134 வாரந்திர ரயில் என, 293 ரயில்களின் இயக்கத்தை அட்டவணைப்படி தெற்கு ரயில்வே துவக்கியுள்ளது.

நாடு முழுவதும், கொரோனா பரவல் தணிந்துள்ளதால், அட்டவணையில் உள்ள படி அனைத்து ரயில்களையும் இயக்குவதற்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் இயங்கிவந்த, 1,700 சிறப்பு ரயில் மீண்டும் பழைய முறையில், இயங்க துவங்கியிருக்கின்றன. தெற்கு ரயில்வே, 293 ரயில்களை அட்டவணைப்படி இயக்குகிறது. இதில், 159 தினசரி ரயில்கள், 134 வாரந்திர ரயில்கள். சிறப்பு ரயில் என அறிவிக்கப்பட்ட இந்த ரயில்கள், இனி, சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் என அழைக்கப்பட உள்ளன.
ஏற்கனவே உள்ள பழைய ரயில் எண்கள் அமலுக்கு வருகிறது. அதன்படி, '0' என துவங்கும் என சிறப்பு ரயில் எண்கள், இனி, '1' அல்லது '2' என துவங்கும். உதாரணமாக, கோவை - நாகர்கோவில் சிறப்பு ரயிலுக்கு, 02668 என எண் வழங்கப்பட்டிருந்தது. இனி, 22668 என்ற எண்ணுடன் இந்த ரயில் இயங்கும். அனைத்து ரயில்கள் இயக்கத்துக்கும், 19 மாத இடைவெளிக்கு பின், அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X