பொது செய்தி

இந்தியா

மணிப்பூர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
இம்பால் : பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து மணிப்பூரில், மியான்மர் எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சுராசந்த்பூர் அருகே அசாம் ரைபிள்ஸ் என்ற துணை ராணுவப் படையின் வாகனத்தை குறி வைத்து, பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.இதில்

இம்பால் : பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து மணிப்பூரில், மியான்மர் எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சுராசந்த்பூர் அருகே அசாம் ரைபிள்ஸ் என்ற துணை ராணுவப் படையின் வாகனத்தை குறி வைத்து, பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.இதில் அசாம் ரைபிள்சின் குகா படைப் பிரிவின் தளபதி விப்லப் திரிபாதி உட்பட ஏழு பேர் இறந்தனர்.

இந்நிலையில் தலைநகர் இம்பாலில் முதல்வர் பைரேன் சிங் நேற்று கூறியதாவது:
அசாம் ரைபிள்ஸ் படையின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், மியான்மர் எல்லை வழியாகவே மணிப்பூருக்குள் நுழைந்துள்னர்.இதையடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இது போன்ற பயங்கரவாத தாக்குதல்களை சகித்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. பயங்கரவாதிகளை விரைவில் பிடித்து, நீதியின் முன் நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X