பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி போடாதவர்களுக்கு பஸ்சில் அனுமதியில்லை

Added : நவ 15, 2021
Share
Advertisement
சூரத் : இரண்டாவது 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்லவும் அரசு பஸ்களில் பயணிக்கவும் இன்று முதல் தடை விதித்து குஜராத்தில் உள்ள சூரத் மாநகாட்சி உத்தரவிட்டுள்ளது.குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சூரத் மாநகராட்சியில் தகுதியுள்ள அனைவருக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி


சூரத் : இரண்டாவது 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்லவும் அரசு பஸ்களில் பயணிக்கவும் இன்று முதல் தடை விதித்து குஜராத்தில் உள்ள சூரத் மாநகாட்சி உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சூரத் மாநகராட்சியில் தகுதியுள்ள அனைவருக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுஉள்ளது.தொற்று பரவல் குறைந்ததால் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் பலரும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.இதையடுத்து இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில் சூரத் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது பற்றி சூரத் மாநகராட்சி கமிஷனர் பஞ்சநதி பானி கூறியதாவது:
தொற்று பரவல் குறைந்ததால் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் இன்று முதல் பூங்கா மிருககாட்சி சாலை அறிவியல் மையங்கள் நுாலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வதற்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோருக்கு தடை விதிக்கப்படுகிறது.அத்துடன் அரசு பஸ்களில் பயணிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்போரை மட்டும் பொது இடங்களில் நுழையவும் அரசு பஸ்களில் பயணிக்கவும் அனுமதிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாநகராட்சியிலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அரசு பஸ்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X