முதல்ல ஜெயில் உணவை சாப்பிடுங்க...: அனில் தேஷ்முக்கிற்கு நீதிமன்றம் அறிவுரை

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மஹா., முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் வீட்டு உணவுக்கு அனுமதி கோரியிருந்த நிலையில், 'முதலில் ஜெயில் உணவை சாப்பிடுங்கள், பிறகு சரியில்லை என்றால் வீட்டு உணவுக்கு அனுமதி வழங்குகிறேன்,' என நீதிபதி கூறியுள்ளார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
Eat, Jail Food, Court, Maharashtra, Ex Home Minister, Request

புதுடில்லி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மஹா., முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் வீட்டு உணவுக்கு அனுமதி கோரியிருந்த நிலையில், 'முதலில் ஜெயில் உணவை சாப்பிடுங்கள், பிறகு சரியில்லை என்றால் வீட்டு உணவுக்கு அனுமதி வழங்குகிறேன்,' என நீதிபதி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. தாக்கரே அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த தேசியவாத காங்.,கை சேர்ந்த அனில் தேஷ்முக், பணமோசடி வழக்கில் கடந்த நவம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கு வீட்டு உணவு வழங்க வேண்டும் என அனில் தேஷ்முக் தரப்பில் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.


latest tamil news



இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, 'முதலில் ஜெயில் உணவை சாப்பிடுங்கள், பிறகு சரியில்லை என்றால் வீட்டு உணவுக்கு அனுமதி வழங்குகிறேன்,' என அறிவுறுத்தினார். அதே நேரத்தில் அவரின் மருந்துகளுக்கு அனுமதி வழங்கியதுடன், 71 வயதாவதால் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் அவருக்கு படுக்கை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-நவ-202104:44:12 IST Report Abuse
J.V. Iyer துணைக்கு நமது ப.சி.யை அனுப்புங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-நவ-202123:45:37 IST Report Abuse
Natarajan Ramanathan இதை ஜெயிலரிடம் கேட்டாலே அனைத்து வசதிகளையும் செய்து தருவார்களே
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்சசி அளவுக்கு சமைத்து பத்தலை...
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
15-நவ-202122:50:38 IST Report Abuse
s vinayak தீர்ப்புகள் திருத்தப்படலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X