அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவி தற்கொலை தலைவர்கள் வேதனை

Added : நவ 15, 2021
Share
Advertisement
சென்னை : 'கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான, பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும்' என, அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:கோவை உக்கடம் பகுதியில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி, ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது, வேதனை அளிக்கிறது.ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள்.

சென்னை : 'கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான, பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும்' என, அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
கோவை உக்கடம் பகுதியில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி, ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது, வேதனை அளிக்கிறது.ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள். அப்படிப்பட்டவர் இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது, ஆசிரியர் சமூகத்திற்கு அவப்பெயர். பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி:
குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் கூடாது. அது அருவருப்பான விஷயம். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்பது குறித்து, கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ:
பாலியல் துன்புறுத்தல் பிரச்னை, பள்ளி முதல்வர் கவனத்திற்கு வந்த போது, அவர் முறையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாக, இந்த தற்கொலை நிகழ்ந்திருக்கிறது. அதற்காக, அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி எழுதி வைத்த குறிப்பில் மேலும் இருவர் பெயரைக் குறிப்பிட்டு உள்ளார். அது குறித்தும் போலீஸ் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X