ஹிந்து -இஸ்லாமிய மதகலவரத்தை தூண்டிய பத்திரிகையாளர்கள்? திரிபுராவில் சர்ச்சை| Dinamalar

ஹிந்து -இஸ்லாமிய மதகலவரத்தை தூண்டிய பத்திரிகையாளர்கள்? திரிபுராவில் சர்ச்சை

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (32)
Share
அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் ஹிந்து - இஸ்லாமிய மதகலவரத்தை இரு பெண் பத்திரிகையாளர்கள் தூண்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் கைதாகியுள்ளனர்.திரிபுரா மாநிலத்தில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெச்.டபிள்யூ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த சம்ரித்தி சகுனியா மற்றும் சுவர்ணா ஜா ஆகிய இரண்டு பெண் பத்திரிக்கையாளர்கள் மீதும்
2 Women Journalists, Detained, Assam, Arrested, Tripura Police, ஹிந்து, இஸ்லாமியர், மதகலவரம், பத்திரிகையாளர்கள், திரிபுரா, சர்ச்சை

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் ஹிந்து - இஸ்லாமிய மதகலவரத்தை இரு பெண் பத்திரிகையாளர்கள் தூண்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் கைதாகியுள்ளனர்.

திரிபுரா மாநிலத்தில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெச்.டபிள்யூ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த சம்ரித்தி சகுனியா மற்றும் சுவர்ணா ஜா ஆகிய இரண்டு பெண் பத்திரிக்கையாளர்கள் மீதும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆதரவாளர் ஒருவர் தலைநகர் அகர்தலாவில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரினார். இதனையடுத்து அவர்கள் மீது மத வன்முறையை தூண்டுவதாக வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil news


கடந்த அக்டோபர் 19ம் தேதி காலை 2:30 மணிக்கு திரிபுரா டக்கார் பஜார் பகுதியிலுள்ள மசூதி ஹிந்தி வெறியர்களால் எரிக்கப்பட்டதாக இந்த இரு பத்திரிக்கையாளர்களும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டனர். ஆனால் உண்மையில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை. இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகியதும் இவர்கள் யார் என விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் தேடத் துவங்கின. ஹிந்து - இஸ்லாமியர்களுக்கு இடையே மதக்கலவரத்தை தூண்டும் வகையில் இவர்களது போலி சமூக வலைத்தள பதிவு இருந்ததாக திரிபுரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தப் பெண் பத்திரிகையாளர்கள் இருவரும் கைதாகியுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X