பொது செய்தி

தமிழ்நாடு

யோகாவில் பெரம்பலுார் சிறுவன் சாதனை

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெரம்பலுார் : 26 வகையான யோகாசனங்களை 3 நிமிடத்தில் செய்து காட்டி, மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன், சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன்- ப்ரியா தம்பதியர் மகன் தவசுதன்,7. அங்குள்ள அம்பாள் மெட்ரிக்., பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் இவர், 100 சங்கத் தமிழ் இலக்கியத்தின் நுால் ஆசிரியர், பாரதியாரின் மனதில்
 யோகாவில் பெரம்பலுார் சிறுவன் சாதனை


பெரம்பலுார் : 26 வகையான யோகாசனங்களை 3 நிமிடத்தில் செய்து காட்டி, மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன், சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன்- ப்ரியா தம்பதியர் மகன் தவசுதன்,7. அங்குள்ள அம்பாள் மெட்ரிக்., பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் இவர், 100 சங்கத் தமிழ் இலக்கியத்தின் நுால் ஆசிரியர், பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும், அண்ணாவின் மனிதன், தாராபாரதியின் திண்ணையை இடித்து தெருவாக்கு, பாரதிதாசனின் சாய்ந்த தராசு, ஔவையாரின் ஆத்திச்சூடி, திருமூலரின் திருமந்திரம், கீதாச்சாரம், 50 தேசத் தலைவர்களின் பெயர் வரலாறு, தமிழக அமைச்சர்களின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்ட நேரத்தில் கூறுகிறார்.

தண்ணீரில் மிதக்கும் ஜலசாசனம், குமுகாசனம், சட்டுராங்காசனம், நாவ்காசனா, தனுராசனா, பத்மாசனம், விரிஷாசனா உள்பட, 26 வகையான யோகாசனங்களை 3 நிமிடம் செய்கிறார். இதேபோல, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான இரட்டை சிலம்பாட்டம், இரட்டை சுருள் உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறுவன் தவசுதன் தனித்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

சோழன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு மற்றும் விரிக்க்ஷா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தினர், சிறுவனின் திறமைக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் வழங்கி உள்ளனர். மாணவனின் திறமையை பாராட்டி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா, எம்.எல்.ஏ., பிரபாகரன் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X