சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மோதல் இருவர் பலி; ஒருவர் காயம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் -அன்னூர் சாலையில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நேருக்கு நேர் மோதியதில் இருவர் இறந்தனர்; ஒருவர் காயமடைந்தார்.காரமடை அடுத்த சின்னதொட்டிபாளையம் எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர், பாபு, 35; கட்டட தொழிலாளி. தேரம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் வாசு, 21, திருப்பூரில் பனியன் கம்பெனியில், வேலை பார்த்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் -அன்னூர் சாலையில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நேருக்கு நேர் மோதியதில் இருவர் இறந்தனர்; ஒருவர் காயமடைந்தார்.
காரமடை அடுத்த சின்னதொட்டிபாளையம் எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர், பாபு, 35; கட்டட தொழிலாளி. தேரம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் வாசு, 21, திருப்பூரில் பனியன் கம்பெனியில், வேலை பார்த்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் பாரதியும், 21, இரு சக்கர வாகனத்தில், மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அதே நேரத்தில் பாபு, இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து, அன்னுார் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, காய்கறி மண்டிகள் அடுத்துள்ள பெட்ரோல் பங்க் அருகே வரும் போது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பலத்த காயம் அடைந்த பாபு சம்பவ இடத்திலே இறந்தார். காயமடைந்த வாசுவும், இவரது வண்டியில் அமர்ந்து வந்த பாரதியும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், முதலுதவி பெற்று, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், கொண்டு செல்லும் வழியில் வாசு இறந்தார். சிறுமுகை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X