தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 802 ஆக சற்று குறைந்துள்ளது: 918 பேர் நலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 802 ஆக சற்று குறைந்துள்ளது: 918 பேர் நலம்

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021
Share
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 805 -ல் இருந்து 802 ஆக சற்று குறைந்துள்ளது. 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 918 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,01,070 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 800 பேருக்கும் பிரிட்டன் மற்றும்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 805 -ல் இருந்து 802 ஆக சற்று குறைந்துள்ளது. 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 918 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,01,070 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 800 பேருக்கும் பிரிட்டன் மற்றும் யு.ஏ.இ.,யிலிருந்து வந்த இருவரையும் சேர்த்து 802 கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,15,632 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,27,47,257 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 480 பேர் ஆண்கள், 322 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,84,946 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,30,648 ஆகவும் அதிகரித்து உள்ளது. 918 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,69,848 ஆக உயர்ந்துள்ளது.

12 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 7 பேரும் அரசு மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,296 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை



சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக இருந்த நிலையில் இன்று (நவ.15 ம் தேதி)122 ஆக குறைந்துள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X