எருமப்பட்டி: எருமப்பட்டி பகுதியில் உற்பத்தி குறைந்ததாலும்,முகூர்த்த நாள் என்பதாலும் மல்லிகை பூ விலை உயர்ந்தது. எருமப்பட்டியை சுற்றியுள்ள போடிநாயக்கன்பட்டி, செவ்வந்திப்பட்டி, தேளூர்பட்டி, செல்லிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்ததாலும், சீசன் மாறியதாலும் மல்லிகை பூ வரத்து முற்றிலும் கு?றைந்தது. இரு மாதங்களுக்கு முன் ஏக்கருக்கு, 10 கிலோ வரை இருந்த மல்லிகை பூக்கள் தற்போது இரு கிலோ கூட வராததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் நாமக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ வரத்து முற்றிலும் குறைந்து, விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கிலோ, 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று முகூர்த்த தினம் என்பதால் நேற்று நாமக்கல் மார்க்கெட்டில், கிலோ, 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE