மாசிலா அருவியில் குளிக்க தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாசிலா அருவியில் குளிக்க தடை

Added : நவ 15, 2021
Share
சேந்தமங்கலம்: கொல்லிமலை மாசிலா அருவியில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து, 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் கொல்லிமலை பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாசிலா அருவியில் தண்ணீர்

சேந்தமங்கலம்: கொல்லிமலை மாசிலா அருவியில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து, 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் கொல்லிமலை பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாசிலா அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் மாசிலா அருவிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதித்து கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X