சுகாதாரம், நோய் தடுப்பு பணி மேற்கொள்ளணும்!| Dinamalar

சுகாதாரம், நோய் தடுப்பு பணி மேற்கொள்ளணும்!

Added : நவ 15, 2021
Share
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் மழைக்கால சுகாதார, நோய் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம்பாளையம் பேரூராட்சி பகுதியில் கடந்த ஓரிரு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பருவநிலை மாற்றமடைந்துள்ளது. பல இடங்களில் வடிகாலிலும், குடியிருப்பு பகுதியிலும் மழை நீர் தேங்கி, கொசு தொல்லை அதிகரித்துள்ளது. மக்கள் மிகவும்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் மழைக்கால சுகாதார, நோய் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம்பாளையம் பேரூராட்சி பகுதியில் கடந்த ஓரிரு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பருவநிலை மாற்றமடைந்துள்ளது. பல இடங்களில் வடிகாலிலும், குடியிருப்பு பகுதியிலும் மழை நீர் தேங்கி, கொசு தொல்லை அதிகரித்துள்ளது. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் பலவிதமான நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இந்நிலையில் சுகாதார பணிகள் மிகவும் தொய்வு நிலையில் காணப்படுகிறது. உள்ளாட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பு கருதி, சுகாதார பணி மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X