பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து அதிகரிப்பு: இஞ்சி விலை குறைவு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கரூர்: வரத்து அதிகரிப்பால், இஞ்சி விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காலகட்டங்களான கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, சித்த மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் இஞ்சி கலந்த டீ மற்றும் மருந்துகள் பயன்பாடு அதிகமாக இருந்தது. இதனால், இஞ்சிக்கு திடீரென தேவை அதிரித்து விலை மளமளவென உயர்ந்தது. கடந்த சில மாதங்களாக, ஒரு கிலோ இஞ்சி, 80 முதல், 120 ரூபாய் வரை விற்றது. இந்த விலை

கரூர்: வரத்து அதிகரிப்பால், இஞ்சி விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காலகட்டங்களான கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, சித்த மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் இஞ்சி கலந்த டீ மற்றும் மருந்துகள் பயன்பாடு அதிகமாக இருந்தது. இதனால், இஞ்சிக்கு திடீரென தேவை அதிரித்து விலை மளமளவென உயர்ந்தது. கடந்த சில மாதங்களாக, ஒரு கிலோ இஞ்சி, 80 முதல், 120 ரூபாய் வரை விற்றது. இந்த விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல், ஆகஸ்ட் வரை நீடித்தது. பிறகு, ஒரு கிலோ, 100 ரூபாயாக குறைந்தது. தற்போது, இஞ்சி சாகுபடி செய்யப்பட்ட மாநிலங்களில், அறுவடை தொடங்கியுள்ளது. இதனால், விலை படிப்படியாக குறைய துவங்கியுள்ளது.


இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் இஞ்சி தேவைக்கு ஏற்றார் போல, உற்பத்தி இல்லை. இதனால், ஆந்திரா, தெலங்கானா, கேரளா மாநிலங்களில் இருந்து, இஞ்சி தமிழகத்துக்கு விற்பனைக்கு வருகிறது. தற்போது, தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல், வடமாநிலங்களிலும் அறுவடை துவங்கியுள்ளதால், வரத்து அதிகரித்துள்ளது. கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு, நாள்தோறும், 200க்கும் மேற்பட்ட மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. இதனால், இஞ்சி விலை குறைய துவங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால், இஞ்சி பயன்பாடு பொதுமக்களிடம் குறைந்துள்ளது. இதையடுத்து, ஒரு கிலோ, 70 முதல், 40 ரூபாய் வரைதான் விலை போகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X