பொது செய்தி

தமிழ்நாடு

குருபெயர்ச்சி வழிபாடு: பக்தர்கள் சுவாமி தரிசனம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் மற்றும் ஆர்.டி. மலையில் உள்ள விராச்சிலை ஈஸ்வரர், பெரியநாயகி அம்மன் மலைக்கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. முன்னதாக விராச்சிலை ஈஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபி?ஷகம் செய்தனர். தொடர்ந்து நவக்கிரகங்களில் வடக்கு முகமாக உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனர். பின்னர்

குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் மற்றும் ஆர்.டி. மலையில் உள்ள விராச்சிலை ஈஸ்வரர், பெரியநாயகி அம்மன் மலைக்கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. முன்னதாக விராச்சிலை ஈஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபி?ஷகம் செய்தனர். தொடர்ந்து நவக்கிரகங்களில் வடக்கு முகமாக உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனர். பின்னர் கோவில் தென்பகுதியில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு, அபிஷேக ஆராதனை நடந்தது. கடந்த ஆண்டு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குருபெயர்ச்சி அடைந்த நிலையில், இந்த ஆண்டு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குருபெயர்ச்சி அடைகிறார். தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பரிகார தோஷங்கள் நிவர்த்தி செய்ய பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குளித்தலை மற்றும் தோகைமலை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் குருபெயர்ச்சி அபிஷேக, ஆராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X