சுண்ணாம்புக்கல் கடத்தல் லாரி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுண்ணாம்புக்கல் கடத்தல் லாரி பறிமுதல்

Added : நவ 15, 2021
Share
குளித்தலை: குளித்தலை அடுத்த, வரவணை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் சுண்ணாம்புக் கல்லை கடத்தி வருவதாக மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு, சுரங்கத் துறை அதிகாரி இளங்கோவன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, அனுமதி இல்லாமல், 15 டன் சுண்ணாம்புக்கற்களை லாரியில்

குளித்தலை: குளித்தலை அடுத்த, வரவணை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் சுண்ணாம்புக் கல்லை கடத்தி வருவதாக மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு, சுரங்கத் துறை அதிகாரி இளங்கோவன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, அனுமதி இல்லாமல், 15 டன் சுண்ணாம்புக்கற்களை லாரியில் ஏற்றியது தெரியவந்தது. அதிகாரியை கண்டதும் டிரைவர் தப்பி ஓடி விட்டார். லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சிந்தாமணிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X