பிளக்ஸ் பேனர்களால் பொதுமக்கள் அச்சம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் அரசு அனுமதியின்றி ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மனைப்பிரிவு விற்பனை செய்பவர்கள், மண்டபங்களில் திருமண விழா நடத்துபவர்கள் என பலர் தங்கள் வியாபாரத்தையும், நிகழ்ச்சிகளையும் விளம்பரம் செய்யும் நோக்குடன் பெரிய அளவில் பிளக்ஸ் பேனர்களை சாலையோர

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் அரசு அனுமதியின்றி ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மனைப்பிரிவு விற்பனை செய்பவர்கள், மண்டபங்களில் திருமண விழா நடத்துபவர்கள் என பலர் தங்கள் வியாபாரத்தையும், நிகழ்ச்சிகளையும் விளம்பரம் செய்யும் நோக்குடன் பெரிய அளவில் பிளக்ஸ் பேனர்களை சாலையோர பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கின்றனர். அப்பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வினாலும்,காற்று வீசும் போதும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் மீது பிளக்ஸ் பேனர்கள் விழுகின்றன. இதனால் பலர் விபத்துகளில் சிக்கி மருத்துவமனையை நாடும் அவலம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் பயன் இல்லை. சாலையோரம் மக்களை அச்சுறுத்தும் வகையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X