நொய்யல் ஆற்றில் குறுகிய பாலம்: போக்குவரத்து நெரிசல் தவிப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கரூர்: நொய்யல் ஆற்றில் குறுகிய பாலம் இருப்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. கரூர் - ஈரோடு சாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக ஈரோடு, கொடுமுடி, பள்ளிபாளையம், கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பஸ், சரக்கு வாகனங்கள் செல்கின்றன. 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம், தற்போது குறுகிய பாலமாக உள்ளதால்,

கரூர்: நொய்யல் ஆற்றில் குறுகிய பாலம் இருப்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. கரூர் - ஈரோடு சாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக ஈரோடு, கொடுமுடி, பள்ளிபாளையம், கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பஸ், சரக்கு வாகனங்கள் செல்கின்றன. 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம், தற்போது குறுகிய பாலமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் கனரக, பள்ளி வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. சில நேரங்களில் வாகனங்கள் பழுதாகி நின்று விட்டால், பாலத்தில் மற்ற வாகனங்கள் கடக்க முடியாத நிலை ஏற்படும். இங்கு மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. அதனால், பாலத்தின் வழியாக செல்வோர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பாலத்தின் அடியில் செல்லும் ஆற்றுப்பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே, பொதுமக்கள் வசதிக்காக நொய்யல் ஆற்றுப்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலத்தை அகலப்படுத்த வேண்டும் அல்லது புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X