சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

மம்தாவுக்கு ஓட்டு விழுமா?

Added : நவ 15, 2021
Share
Advertisement
மம்தாவுக்கு ஓட்டு விழுமா?'மாநில கட்சியின் தலைவர் என்ற நிலையை கடந்து, தேசிய தலைவர் என்ற அந்தஸ்தை பெறுவதற்காக எங்கள் தலைவி கடுமையாக உழைக்கிறார்...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியைப் பற்றி பெருமிதத்துடன் கூறுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள். கோவாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, முதல்வர் பிரமோத்
அக்கம் பக்கம்


மம்தாவுக்கு ஓட்டு விழுமா?


'மாநில கட்சியின் தலைவர் என்ற நிலையை கடந்து, தேசிய தலைவர் என்ற அந்தஸ்தை பெறுவதற்காக எங்கள் தலைவி கடுமையாக உழைக்கிறார்...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியைப் பற்றி பெருமிதத்துடன்
கூறுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள். கோவாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ., இடையே கடுமையான போட்டி இங்கு நிலவி வரும் நிலையில், மம்தாவும் களத்தில்
குதித்துள்ளார். சமீபத்தில் கோவா மாநிலத்துக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்த மம்தா, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவாவில் பெரும்பாலான மக்கள், 'கொங்கணி' மொழி பேசுகின்றனர்.இதனால் அந்த மாநில மக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதற்காக, தானும் கொங்கணியில் பேச விரும்புகிறார். இதற்காக டியூஷன் படித்து வருகிறார். 'எங்கள் தலைவிக்கு பெங்காலி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சரளமாக பேசத் தெரியும். இதுதவிர நேபாளி, அசாமி, உருது, குர்முகி ஆகிய மொழிகளிலும் ஓரளவு பேசுவார்.
'அடுத்ததாக தென் மாநில மொழிகளையும் பேசக் கற்றுக் கொள்ள விரும்புகிறார். நாட்டின் அடுத்த பிரதமர் என்றால் சும்மாவா...' என்கின்றனர், திரிணமுல் கட்சியினர். எதிர்க்கட்சியினரோ, 'எத்தனை மொழிகள் பேசத் தெரியும் என்பது முக்கியமல்ல; தேர்தலில் எத்தனை ஓட்டு விழுகிறது என்பது தான் முக்கியம்' என,
கிண்டலடிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X