சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 15, 2021
Share
Advertisement
காங்., பொதுச் செயலர் பிரியங்கா: உ.பி.,யில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என ஏராளமான கட்சி தொண்டர்கள் என்னிடம் கேட்டு வருகின்றனர். எனவே, அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்; எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது.'டவுட்' தனபாலு: காங்கிரஸ் சோனியாவின் குடும்ப கட்சி தான் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம்


'டவுட்' தனபாலு

காங்., பொதுச் செயலர் பிரியங்கா: உ.பி.,யில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என ஏராளமான கட்சி தொண்டர்கள் என்னிடம் கேட்டு வருகின்றனர். எனவே, அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்; எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது.

'டவுட்' தனபாலு: காங்கிரஸ் சோனியாவின் குடும்ப கட்சி தான் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது. கட்சிக்கு செயல் தலைவராக சோனியா உள்ளார்... மாநிலத்திற்கு என தனியாக ஒரு தலைவர், பொறுப்பாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் இல்லாத அதிகாரமாக, சோனியாவின் மகள் பிரியங்கா, 'கூட்டணியில்லை; தனித்து போட்டி' என அறிவிக்கிறார். குடும்ப கட்சி தான் என்பதற்கு, இதுவே, 'டவுட்'டே இல்லாத உதாரணம்!


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்:
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமியும், நானும் தனித்தனியாக வழங்கி வருகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பாகுபாடும் இல்லை.

'டவுட்' தனபாலு: நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் தான், தி.மு.க.,வின் சூறாவளியில், உங்களின், அ.தி.மு.க., சிக்கி சின்னாபின்னாகாமல் இருக்கும். ஏனெனில், இப்போதைக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் நீங்கள் இருவரும் தான். இதை அறிந்ததால் தான், எத்தனையோ உரசல்கள் இருந்த போதிலும், அதை வெளிக்காட்டாமல், 'நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்' என்கிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!

முதல்வர் ஸ்டாலின்: மழை, வெள்ளப் பாதிப்பு பற்றி எதிர்கட்சிகளின் குற்றசாட்டுகள் குறித்து தான் ஒருபோதும் கவலைபடுவதில்லை. ஓட்டு போட்டவர்கள் மட்டும் அல்ல... ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்து உழைப்பதே எங்களது கொள்கை. மழை வெள்ளப் பாதிப்புகள் குறைந்தும், அ.தி.மு.க., செய்த ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும். தவறு செய்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவர்.

'டவுட்' தனபாலு: மழை, வெள்ளப் பாதிப்புக்கு, 'அது சரியில்லை, இது சரியில்லை' என, பத்திரிகையாளர்களிடம் பேசும், அ.தி.மு.க., தலைவர்கள், வரிந்து கட்டி, மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இதை பார்த்ததும், 'இவர்களை இப்படியே விட்டால் சரிப்பட்டு வர மாட்டார்கள்' என நினைத்து, 'விசாரணை கமிஷன்' என, மிரட்டுகிறீர்களோ என்பதே, நடுநிலையாளர்களின், 'டவுட்!'

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X