சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

வாழ்த்து கூற தகுதி வேண்டும்!

Added : நவ 15, 2021 | கருத்துகள் (1)
Advertisement
வாழ்த்து கூற தகுதி வேண்டும்!எஸ்.ஆர்.ரத்தினம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஹிந்து பண்டிகைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற கருத்து அதிகமாக எழுப்பப்படுகிறது.முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாததை, சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.அவர் வாழ்த்து சொல்லவில்லை


வாழ்த்து கூற தகுதி வேண்டும்!எஸ்.ஆர்.ரத்தினம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஹிந்து பண்டிகைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற கருத்து அதிகமாக எழுப்பப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாததை, சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.அவர் வாழ்த்து சொல்லவில்லை என்றால், பண்டிகை முழுமை அடையாது என நினைப்பது அறியாமை. நம் பாரம்பரிய பண்டிகைகள் எல்லாம், அரசியலை கடந்தவை; அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை.
நம் ஹிந்து பண்டிகைகள், வெறும் சடங்குகள் அல்ல; அவற்றில் விஞ்ஞானமும், மருத்துவமும், உளவியலும் பொதிந்து இருக்கின்றன.கொண்டாடுவோருக்கு மனநிறைவையும், எதிர்காலத்தை திட்டமிடவும், சவால்களை எதிர்கொள்ளவும், தேவையான மன உறுதியையும், செயலில் புதிய உத்வேகத்தையும் ஊட்டுபவை ஆகும்.
நம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வோருக்கு, சில குறைந்தப்பட்ச தகுதிகள் தேவை.ஹிந்து தர்மத்தை புரிந்து கொள்ளும் அறிவு, நம் கலாசாரத்தின் மீது நம்பிக்கை, நாகரிகம், மாண்பு இதெல்லாம் இருக்க வேண்டும். அனைத்து மனிதர்களையும் சமமாக நினைக்கும் பங்குவமாவது இருக்க வேண்டும்.
இது எதுவும் இல்லாதவரிடம், வாழ்த்து பெறுவது நமக்கு அவமானம். தகுதி இல்லாதவரின் வாழ்த்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.வாழ்த்து என்பது இதயத்தில் இருந்து வர வேண்டும்; அதை கட்டாயப்படுத்தி பெற கூடாது. நல்லவர் வாழ்த்தும் போது, புண்ணியம் சேரும். தீயவர் வாழ்த்தும் போது, அது பாவத்தையே தரும்.
ஹிந்து தர்மத்தை அழிக்க நினைப்போரோடு நட்பு பாராட்டுபவர், ஒன்று அறியாமையில் இருப்பார் அல்லது பணத்திற்காக எதையும் செய்ய துணிந்தவராக இருப்பார்.
ஆட்சியை பிடித்து விட்டாலே, நம் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் தகுதியை ஒருவர் அடைந்து விட்டார் என கூற முடியாது.அறிவுடையோருக்கு ஆண்டியும், அரசனும் ஒன்று தான். ஒரு மனிதனின் தகுதி என்பது, அவரின் குணத்தை பொறுத்ததே தவிர, பதவியை பொருத்தது அல்ல.


ஆசிரியர்கள் எதற்கு இருக்கின்றனர்?ஸ்ரீ.சாரங்கா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் ஸ்டாலின், 'இல்லம் தேடிக் கல்வி' என்ற திட்டத்தை துவக்கியுள்ளார். இத்திட்டத்திற்கு உதவ தன்னார்வலர்கள் 85 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க, அவர்கள் ஒரு பாலமாக இருப்பர் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அரசுப் பள்ளியில் சேர்க்கை சதவீதம் உயரும் அளவுக்கு உள்கட்டமைப்பு உள்ளதா?அரசுப் பள்ளியில் இணைய வழியில் கல்வி கற்பித்தல் நடக்கவில்லை. இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டை முழுமையாக இழந்து விட்டனர். இந்த கல்வி ஆண்டும் முழுமையாக நடக்க சாத்தியக்கூறுகள் இல்லை.அதே நேரம், தனியார் பள்ளிகளில் இணைய வழியில் கல்வி கற்பித்தல் மற்றும் தேர்வுகளை முறையாக நடத்தியுள்ளனர். இது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கற்பித்தல் இடைவெளியை இன்னும் பெரிதுபடுத்தி உள்ளது.தனியார் பள்ளியில், சேர்க்கை அதிகமாக காரணம், மத்திய கல்வித் திட்டம், ஆசிரியர் அர்ப்பணிப்பு, அடிப்படை கட்டமைப்பு போன்றவற்றை தான் என்பதை, தமிழக கல்வித் துறை உணர வேண்டும்.பட்ஜெட்டில், 35 ஆயிரம் கோடி ரூபாய் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு வருமானத்தில் கணிசமான தொகை, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செலவிடப்
படுகிறது.பெருந்தொற்று காரணமாக, இந்த இரண்டு ஆண்டுகளில், பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் கல்வி கற்பித்தல் பணி மேற்கொள்ளாததால், அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அவசியம் தேவை.இவ்வளவு அரசு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய சூழலில், இந்த புது தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.மேலும், மாதா மாதம் சம்பளம் வாங்கும் அரசு ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் எடுக்காத நிலையில், தன்னார்வலர்களின் பங்களிப்பை நம்பி எப்படி கல்வித் தரத்தை உயர்த்த முடியும்?வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தால், ஆசிரியர்களின் தேவையே இல்லாமல் போகும் நாளும் வெகு தொலைவில் இல்லை.தன்னார்வலர்கள் மூலம் கல்வியை நடைமுறை செய்யும் விஷயம், ஆசிரியர்களின் மீது உள்ள நம்பிக்கையின்மையை காட்டுகிறது.
அரசுப் பள்ளியின் தரம் உயர நடவடிக்கை எடுக்காமல், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நினைப்பது முட்டாள்தனம்.


ஓய்வு பெறும் வயதை குறையுங்கள்!ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக, 72.20 லட்சம் நபர்கள் காத்திருப்பதாக, மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட 12.70 லட்சம் பேர் அதிகம்.
இதற்கு காரணம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்படாமலே இருப்பது தான்.ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான பணப்பலன் தொகையை வழங்குவதற்கு, தமிழக அரசின் கஜானாவில் நிதிப் பற்றாக்குறை உள்ளது. இதனால், அரசு ஊழியரின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
புதிய காலி பணியிடம் உருவாகாமல் இருப்பதற்கு, பணி ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதும் ஒரு முக்கிய காரணம்.அரசு பணிக்காக, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நபர்களின் வயது உயர்ந்து வருகிறது. அரசு வேலை பெறும் வயது தகுதியை இழந்து விடும் பரிதாபமான நிலையில் அவர்கள் உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், 2022, ஆண்டிலாவது அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 58 ஆக மாற்றும் அரசாணையை வெளியிட்டு, அனைத்து அரசுத் துறைகளிலும் காலி பணியிடங்களை உருவாக்க வேண்டும்.ஏற்கனவே, அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் ஏராளமாக உள்ளன. அந்த இடங்களில், தகுதியாக இளைஞர்களை நியமித்தால், தமிழகத்தில் வேலையின்மை பிரச்னை கணிசமாக குறையும்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-நவ-202119:20:59 IST Report Abuse
D.Ambujavalli ஒய்வு பெற்ற பின்னும், நீட்டிப்பு வேண்டி அரசு பணியில் ருசி கண்ட பழைய 'பெருச்சாளிகள்' விட்டுக்கொடுக்காமல் இருக்கையில், இளையவர்களுக்கு எப்படி 'விடியல்' சாத்தியமாகும் ? நல்ல நாள், பண்டிகைகளுக்கு மதத்தலைவர்கள், ஆன்மீக பெரியவர்களின் ஆசிகளும், வாழ்த்துக்களும் இருந்தால் போதுமே ? தானாக முன்வந்து, தான் இந்நிலைக்கு வரக்காரணமானவர்களை கௌரவிக்காதவர் வாழ்த்தித்தான் பண்டிகைகள் நிறைவடையுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X