சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ரூ.200 கோடியில் கட்டி வீணாக கிடக்கும் வீடுகள்!

Added : நவ 15, 2021
Share
Advertisement
ரூ.200 கோடியில் கட்டி வீணாக கிடக்கும் வீடுகள்!''மனிதாபிமான அதிகாரிக்கு பாராட்டு குவியுது பா...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''தெற்கு ரயில்வேயில, மதுரை கோட்ட மேலாளரா, பெரும்பாலும் வட மாநில அதிகாரிகளை தான் நியமிப்பாங்க... இந்த முறை, திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லுாரைச் சேர்ந்த பத்மநாபன்


டீ கடை பெஞ்ச்


ரூ.200 கோடியில் கட்டி வீணாக கிடக்கும் வீடுகள்!''மனிதாபிமான அதிகாரிக்கு பாராட்டு குவியுது பா...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.

''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''தெற்கு ரயில்வேயில, மதுரை கோட்ட மேலாளரா, பெரும்பாலும் வட மாநில அதிகாரிகளை தான் நியமிப்பாங்க... இந்த முறை, திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லுாரைச் சேர்ந்த பத்மநாபன் அனந்த் என்ற அதிகாரியை போட்டிருக்காங்க... சொந்த மாநிலம்கிறதால, அவரும் உற்சாகமா களத்துல இறங்கி வேலை
பார்க்காரு பா...

''சமீபத்துல, கீழ்மட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்... அதுல ஒரு பெண் அதிகாரி, வலி காரணமா கழுத்து பட்டை அணிந்து வந்திருந்தாங்க... உடனே அவங்களை, அவங்க சீட்டுக்கு போகும்படி சொல்லிட்டாரு பா...

''கூட்டம் முடிஞ்சதும், அந்த பெண் அதிகாரி இருக்கைக்கு பத்மநாபன் போய் பார்வையிட்டார்... சீட்டுக்கு நேரா கம்ப்யூட்டர் இல்லாம, உயரமா இருந்ததைப் பார்த்தவர், அதை சரி செய்ய உத்தரவு போட்டாரு பா...

''கம்ப்யூட்டரைஅண்ணாந்து பார்த்து ஒர்க் பண்றது தான் கழுத்து வலிக்கு காரணம்... இனிமே வசதியா அமர்ந்து வேலை பாருங்கன்னு சொல்லிட்டு போனாரு...

''வழக்கமா அறையை விட்டு வெளியில வராத கோட்ட மேலாளர்கள் மத்தியில, இவரது செயல்பாட்டை மற்ற அதிகாரிகள் பாராட்டுறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''பொறியாளர் பணிக்கு பேரம் நடக்குல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''டெண்டர் முறைகேடு புகார்ல சிக்குன கோவை மாநகராட்சி நகர பொறியாளரை, செப்டம்பர் 25ம் தேதி பணியில இருந்து விடுவிச்சாவ... ரெண்டு மாசத்தை நெருங்கியும், இன்னும் புது
அதிகாரியை நியமிக்கல வே...

''இதே மாதிரி, திருப்பூர் நகர பொறியாளர் பணியிடமும், வேலுார்ல உதவி நிர்வாக பொறியாளர் பணியிடமும் காலியாவே கிடக்கு... முக்கியப் புள்ளி உறவினரின் வீட்டுக்கு அதிகாரிகளை அழைச்சு, ஒரு 'போஸ்டிங்'குக்கு, 25 லட்சத்துல ஆரம்பிச்சு, 1 கோடி ரூபாய் வரை பேரம் பேசுதாவ வே...

''இவ்வளவு பணத்தை குடுத்துட்டு, போட்டதை எடுக்க முடியுமாங்கிற தயக்கத்துல பல அதிகாரிகளும் ஆர்வம் காட்டலை... அதான், பணியிடங்களை நிரப்புறது தாமதம் ஆகுது வே...'' என்றார் அண்ணாச்சி.

''மணிவண்ணன் வரார்... சுக்கு காபி குடும் நாயரே...'' என்ற குப்பண்ணாவே, ''200 கோடி ரூபாய்ல கட்டின வீடுகள் சும்மா கிடக்கறது ஓய்...''
என்றார்.

''எந்த ஊருல பா...'' என, விசாரித்தார் அன்வர்பாய்.

''காஞ்சிபுரம் வேகவதி ஆற்றுல, ஆக்கிரமித்து வீடு கட்டியவாளை காலி பண்ணிண்டு, மறுகுடியமர்வு செய்ய, 200 கோடி ரூபாய்ல, குடிசை மாற்று வாரியம் சார்புல 2,112 வீடுகளை காஞ்சிபுரம் பக்கத்துல கட்டினா ஓய்...

''கட்டி முடிச்சு ஒரு வருஷமாகிடுத்து... இன்னும் பயனாளிகள் வசம் ஒப்படைக்கலை ஓய்... ஏன்னா, பயனாளிகள் எல்லாரும் பங்கு தொகையா, 1.5 லட்சம் ரூபாய் கட்டணுமாம்... யாரிடமும் அந்த அளவுக்கு வசதி இல்லை...

''வங்கி கடன் வாங்கி குடுக்க ஒரு பக்கம் ஏற்பாடுகள் நடந்தது... ஆயிரம், ரெண்டாயிரம் கோடி கடனை வாங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போற தொழிலதிபர்களுக்கு கடன் தர்ற வங்கிகள், சாதாரண, ஏழை, பாழைகளுக்கு கடன் தருமோ...?

''இதனால, கட்டின வீடுகள் சும்மா கிடக்கறது... கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம, வீடுகளை இழந்தவா தவிச்சுண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X