இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : நவ 15, 2021
Share
நவ., 16, 1801ஜெகவீரகட்டபொம்மனின் மகனாக, 1772ல் பிறந்தவர் குமாரசாமி. பேசும் திறன் குறைவாக இருந்ததால் மக்கள் இவரை, 'ஊமைத்துரை' என்றழைத்தனர். திட்டம் தீட்டுவதில் வல்லவராகவும், வீரமும், துணிச்சலும் மிகுந்தவராகவும் இருந்தார்.இவரது அண்ணன், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரராக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்ததால், போர் ஏற்பட்டது. -1799ல் ஆங்கிலேய

இதே நாளில் அன்று


நவ., 16, 1801



ஜெகவீரகட்டபொம்மனின் மகனாக, 1772ல் பிறந்தவர் குமாரசாமி. பேசும் திறன் குறைவாக இருந்ததால் மக்கள் இவரை, 'ஊமைத்துரை' என்றழைத்தனர். திட்டம் தீட்டுவதில் வல்லவராகவும், வீரமும், துணிச்சலும் மிகுந்தவராகவும் இருந்தார்.இவரது அண்ணன், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரராக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்ததால், போர் ஏற்பட்டது. -1799ல் ஆங்கிலேய அரசால், கட்டபொம்மன் துாக்கிலிடப்பட்டார். சிறையில் இருந்த ஊமைத்துரையை, அவரது ஆதரவாளர்கள் சண்டையிட்டு மீட்டனர். மருது சகோதரர்களுடன் இணைந்து, ஆங்கிலேயரை எதிர்த்தார்.
பல இடங்களுக்கு தப்பிச் சென்றவர், இறுதியில் சிறை பிடிக்கப்பட்டார். ஆங்கிலேய அரசால், 1801 நவம்பர் 16ல், தன் 30வது வயதில் பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் துாக்கிலிடப்பட்டார்.ஊமைத்துரை காலமான தினம் இன்று!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X