உத்தரவு கிடைத்தும் வீடு கட்ட முடியாமல் அவதி| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

உத்தரவு கிடைத்தும் வீடு கட்ட முடியாமல் அவதி

Added : நவ 15, 2021
Share
பந்தலுார்: பந்தலுார் அருகே, கோட்டப்பட்டி பழங்குடியினர் கிராமத்தில், வீடு கட்டும் பணி உத்தரவை திரும்ப பெற்றதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டப்பட்டி பகுதியில் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 13 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சேதமடைந்த வீடுகளுக்கு பதில் புதிய குடியிருப்புகள் கட்ட தலா, 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு

பந்தலுார்: பந்தலுார் அருகே, கோட்டப்பட்டி பழங்குடியினர் கிராமத்தில், வீடு கட்டும் பணி உத்தரவை திரும்ப பெற்றதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டப்பட்டி பகுதியில் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 13 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சேதமடைந்த வீடுகளுக்கு பதில் புதிய குடியிருப்புகள் கட்ட தலா, 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, 8 பேருக்கு பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டு பணியும் துவக்கப்பட்டது.இந்நிலையில், கூடலுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, உறுப்பினர் பாரதி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், கிராமத்திற்கு சென்று, பணிக்கான உத்தரவை திரும்ப வாங்கி சென்றுள்ளனர்.இது குறித்து தட்டிகேட்ட சிலரை மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பழங்குடியின மக்கள் வீடு கட்டமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன் குமாரமங்கலம் கூறுகையில், ''இந்த பிரச்னை குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டு, பழங்குடியின மக்களுக்கு வீடுகளை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.ஊராட்சி ஒன்றிய தலைவர், கீர்த்தனா கூறுகையில், ''இதுகுறித்து வார்டு உறுப்பினர்களிடம் பேசப்பட்டுள்ளது. அவர்கள் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X