அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 15, 2021
Share
குழந்தைகளுடன் பொழுதுபோக்குஇன்றைய சூழலில் குழந்தைகளுடன் பெற்றோர் நேரம் செலவிடுவது குறைவாக உள்ளது. இந்நிலையில் தங்கள் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடும் தந்தைகளின் மூளை அமைப்பு, மற்ற தந்தையை விட சிறப்பாக உள்ளது என பிரிட்டனின் எசெக்ஸ் பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் 50 பேரின் மூளை திறனை ஆய்வு செய்தனர். அவர்களிடம் அவர்களது குழந்தைகளிடம் எந்த


குழந்தைகளுடன் பொழுதுபோக்கு



இன்றைய சூழலில் குழந்தைகளுடன் பெற்றோர் நேரம் செலவிடுவது குறைவாக உள்ளது. இந்நிலையில் தங்கள் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடும் தந்தைகளின் மூளை அமைப்பு, மற்ற தந்தையை விட சிறப்பாக உள்ளது என பிரிட்டனின் எசெக்ஸ் பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் 50 பேரின் மூளை திறனை ஆய்வு செய்தனர். அவர்களிடம்
அவர்களது குழந்தைகளிடம் எந்த அளவுக்கு பொழுது போக்குகின்றனர் என ஆராயப்பட்டது. இதில் குழந்தை களிடம் அதிக நேரம் இருக்கும் தந்தையின் மூளை செயல்பாடு சிறப்பாக இருப்பது கண்டறியப்பட்டது.


தகவல் சுரங்கம்



தேசிய பத்திரிகை தினம்

இந்திய பிரஸ் கவுன்சில் 1966 ஜூலை 4ல் தொடங்கப் பட்டு நவ.16ல் செயல்பட துவங்கியது. இதை அங்கீகரிக்கும் விதமாக நவ.16ல் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது துாண் பத்திரிகை, ஊடகம். மக்கள் பிரச்னையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பதில் பத்திரிகை முக்கிய பங்காற்றுகிறது. சமூகத்தின் கண்ணாடியாக பத்திரிகையாளர்கள் உள்ளனர். ஆபத்தான சூழல்களிலும் பணியாற்றி மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கின்றனர். கொரோனா சூழலில் பத்திரிகையின் பணி அளப்பரியது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X