தொழிலாளர்கள் பற்றாக்குறை இயந்திர பயன்பாடு அதிகரிப்பு| Dinamalar

தொழிலாளர்கள் பற்றாக்குறை இயந்திர பயன்பாடு அதிகரிப்பு

Added : நவ 15, 2021
Share
வால்பாறை: வால்பாறையில், தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற தோட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த, 2001ம் ஆண்டு வரை, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் எஸ்டேட்களில் பணிபுரிந்தனர்.அதன் பின், தொழிலாளர்கள் சம்பளம் குறைக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டுவெளியேறி, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் குடியேறினர்.தொழிலாளர்
 தொழிலாளர்கள் பற்றாக்குறை இயந்திர பயன்பாடு அதிகரிப்பு

வால்பாறை: வால்பாறையில், தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற தோட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த, 2001ம் ஆண்டு வரை, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் எஸ்டேட்களில் பணிபுரிந்தனர்.அதன் பின், தொழிலாளர்கள் சம்பளம் குறைக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டுவெளியேறி, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் குடியேறினர்.தொழிலாளர் வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்ட எஸ்டேட் நிர்வாகங்கள், தற்போது வெளிமாநிலத் தொழிலாளர்களை வரவழைத்து, தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.இருப்பினும், சீசன் காலங்களில் தேயிலை முழுமையாக பறிக்க முடியாத சூழ்நிலையில், நவீன இயந்திரத்தை பயன்படுத்தி தேயிலை பறிக்கும் பணியை மேற்கொள்கின்றனர்.தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரத்தை பயன்படுத்தி தேயிலை பறிக்க வேண்டியுள்ளது. 30 தொழிலாளர்களின் பணியை, ஒரு மிஷினில் மூன்று தொழிலாளர்களை கொண்டு மேற்கொள்ளலாம்.சமதளமாக உள்ள தேயிலை காட்டில் மட்டுமே இந்த மிஷினை பயன்படுத்த முடியும் என்பதால், பிற இடங்களில் தொழிலாளர்கள் கத்திரி வெட்டு வாயிலாக தேயிலை பறிக்கின்றனர்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X