நெகமம்: நெகமத்தில் அமைந்துள்ள துணை வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தை திறந்து, விவசாயிகளுக்கு தேவையான விதை, உரங்களை வினியோகிக்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, வட கிழக்கு பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில், நெகமத்தில் வேளாண் துணை விரிவாக்க மையம் அமைக்கப்பட்டது. நெகமம் வாரச்சந்தை அருகே, அமைக்கப்பட்ட இக்கட்டடம் சமீபத்தில் திறக்கப்பட்டது.தற்போது, முழுநேரமாக இல்லாமல், அவ்வப்போது திறக்கப்படுவதால், நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.பொள்ளாச்சி வடக்கு - கிழக்கு வட்டார பா.ஜ., விவசாய பிரிவு தலைவர் அண்ணாதுரை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நெகமம் சுற்றுப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும், 20க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இப்பகுதி விவசாயிகளுக்காக, இடுபொருள் மற்றும் உர விற்பனை செய்ய துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்பட்டது.தற்போது, வடகிழக்கு மழை பெய்யும் நிலையில், விவசாயிகள் நிலத்தை உழுது, விதைப்பு மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். ஆனால், விதை மற்றும் உரம் வினியோகிப்பதற்கான விரிவாக்க மையம் மூடப்பட்டுள்ளது.வடக்கு வட்டார வேளாண்துறை அதிகாரிகள், இக்கட்டடத்தை திறந்து, விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்களை வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE