செய்தி செய்தி

தமிழ்நாடு

நிலத்தில் பண்ணை குட்டை அமைக்க விவசாயிகள் ஆர்வம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
உடுமலை: விவசாயிகள் தங்களது நிலத்தில் பண்ணைக்குட்டை அமைத்து, விவசாயம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயம் பிரதான தொழிலாகும். இதனால், அணை மற்றும் கிணற்றுப்பாசனம் வாயிலாக, பயிர் சாகுபடி செய்யப்பட்டும் வருகின்றன.அதேநேரம், விவசாயிகளின் நலன் கருதி, மழைநீரை சேமிக்க குளங்களை புனரமைத்தல், சம உயர வரப்பு வெட்டுதல், கசிவு



உடுமலை: விவசாயிகள் தங்களது நிலத்தில் பண்ணைக்குட்டை அமைத்து, விவசாயம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயம் பிரதான தொழிலாகும். இதனால், அணை மற்றும் கிணற்றுப்பாசனம் வாயிலாக, பயிர் சாகுபடி செய்யப்பட்டும் வருகின்றன.அதேநேரம், விவசாயிகளின் நலன் கருதி, மழைநீரை சேமிக்க குளங்களை புனரமைத்தல், சம உயர வரப்பு வெட்டுதல், கசிவு நீர் குட்டை அமைத்தல், தடுப்பபணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள், அரசால் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.இந்நிலையில், விவசாயிகள் சிலர், பண்ணைக்குட்டை அமைத்து விவசாயம் மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வகையில், இந்திராநகர் பகுதி ஒட்டி, விளைநிலங்களில், பண்ணை குட்டை அமைக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் கூறியதாவது:மழைக்காலம் மற்றும் பாசன நீர் பெறப்படும் காலத்தில், அதிகப்படியான தண்ணீர் வழிந்தோடி, வீணாகிறது. இதனை தடுக்க, சரியான இடத்தில் பண்ணைக்குட்டை அமைத்து, தண்ணீரை தேக்கி சுழற்சி செய்வதால், மானாவாரி நிலத்திலும் பசுமையை உருவாக்க முடிகிறது.நிலத்தடி மட்டம் உயர்கிறது. சிலர், பண்ணைக் குட்டையில், மீன் வளர்ப்பிலும் ஈடுபடுவதால் கூடுதல் வருவாயை ஈட்ட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X