கொசு ஒழிப்பு பணிகளில் தொடர் அலட்சியம் : நோய் அபாயத்தில் கிராம மக்கள்

Added : நவ 15, 2021
Share
Advertisement
உடுமலை: தொடர் மழைக்குப்பிறகு அதிகரித்துள்ள கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த, குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தினர் அக்கறை காட்டாததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர். உடுமலை சுற்றுப்பகுதிகளில், வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குடிமங்கலம் வட்டாரத்திலும் நடப்பாண்டு நல்ல மழை பெய்துள்ளது.தொடர்மழையால், கிராம குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளது; நீர்



உடுமலை: தொடர் மழைக்குப்பிறகு அதிகரித்துள்ள கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த, குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தினர் அக்கறை காட்டாததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குடிமங்கலம் வட்டாரத்திலும் நடப்பாண்டு நல்ல மழை பெய்துள்ளது.தொடர்மழையால், கிராம குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளது; நீர் நிலைகளுக்கும் வரத்து கிடைத்துள்ளது. விளைநிலங்கள் மற்றும் ரோட்டோரங்களில், பசுமை திரும்பியுள்ள நிலையில், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளில், தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், நன்னீர் மற்றும் கழிவு நீரில், உற்பத்தியாகும் கொசுக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வழக்கமாக, பருவமழை சீசனில், காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது; கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளதால், மக்களுக்கு நோய் பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த, தொலைநோக்கு அடிப்படையில், 'நொச்சி செடி' கள் வழங்கும் திட்டம், ஊரக வளர்ச்சித்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், நொச்சி செடிகள் உற்பத்தி செய்து கிராமங்களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம், குடிமங்கலம் ஒன்றியத்தில், தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதே போல், குறிப்பிட்ட இடைவெளியில், கிராமங்களில், கொசு மருந்து தெளிக்கும் பணியையும், ஊராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்வதில்லை. இதனால், கிராமங்களில், கொசுத்தொல்லை அதிகரித்து, மக்கள் திண்டாடி வருகின்றனர். எனவே, சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில், கொசு ஒழிப்பு பணிகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X