ரயில்வே யு.டி.எஸ்., செயலி செயல்படாது! டிக்கெட் பெற கவுன்டரில் காத்திருக்கணும்| Dinamalar

ரயில்வே யு.டி.எஸ்., செயலி செயல்படாது! டிக்கெட் பெற கவுன்டரில் காத்திருக்கணும்

Added : நவ 15, 2021
Share
பொள்ளாச்சி: சென்னை புறநகர் தவிர மற்ற பகுதிகளில் முன்பதிவில்லா ரயில் டிக்கெட் வாங்க உதவும் யு.டி.எஸ்., செயலி தற்காலிகமாக செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ரயில் பயணிகளுக்கு, பயணியர் ரயில்கள் மற்றும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்களில், சாதாரண டிக்கெட் (முன்பதிவு இல்லாத டிக்கெட்) வாங்க பெரும் உதவியாக இருந்தது யு.டி.எஸ்., செயலி ஆகும்.ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட்



பொள்ளாச்சி: சென்னை புறநகர் தவிர மற்ற பகுதிகளில் முன்பதிவில்லா ரயில் டிக்கெட் வாங்க உதவும் யு.டி.எஸ்., செயலி தற்காலிகமாக செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ரயில் பயணிகளுக்கு, பயணியர் ரயில்கள் மற்றும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்களில், சாதாரண டிக்கெட் (முன்பதிவு இல்லாத டிக்கெட்) வாங்க பெரும் உதவியாக இருந்தது யு.டி.எஸ்., செயலி ஆகும்.ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுன்டரில் காத்திருக்காமல், மொபைல்போன் வாயிலாக, முன்பதிவில்லா டிக்கெட்டை இந்த செயலி வாயிலாக பெற இயலும். இது, ரயில்வே நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ செயலியாக இருந்தது.இந்த செயலியை பயன்படுத்துவதன் வாயிலாக, குறுகிய துாரம் முன்பதிவின்றி பயணிப்போர், தினசரி ரயில் பயன்படுத்துவோர் நேர விரயமின்றி டிக்கெட் எடுத்து பயணித்து வந்தனர்.இந்நிலையில், தற்போது பொள்ளாச்சி வழித்தடத்தில், கோவை - பழநி; கோவை - பொள்ளாச்சி; பாலக்காடு - பொள்ளாச்சி முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, கோவை - பழநி ரயில் இயங்க துவங்கி விட்டது.இந்த ரயில்களில், முன்பதிவில்லா டிக்கெட்டுகள், யு.டி.எஸ்., செயலி வாயிலாக வாங்க இயலவில்லை என பயணியர் புகார் எழுப்புகின்றனர். யு.டி.எஸ்., செயலி குறித்து, தெற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.தற்போது வரை, கொரோனா பாதிப்பு முழுமையாக ஒழிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பாததால், ரயில்கள் இயக்கம் உறுதி தன்மையற்று உள்ளது. ஆகவே, சென்னை புறநகர் ரயில்கள் தவிர, மற்ற ரயில்களுக்கு தற்காலிகமாக யு.டி.எஸ்., செயலியை பயன்படுத்தி டிக்கெட் வாங்கவோ, சீசன் டிக்கெட் எடுக்கவோ இயலாது என அறிவித்துள்ளது.எனவே, மீண்டும் யு.டி.எஸ்., செயலி முழுமையான பயன்பாட்டுக்கு வரும் வரை, பயணியர் ரயில்வே ஸ்டேஷன் கவுன்டர்களில் மட்டுமே டிக்கெட் பெற இயலும் என்ற, நிலை உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X