துளிகள் செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : நவ 15, 2021
Share
Advertisement
சட்ட உதவி, விழிப்புணர்வு முகாம்பொள்ளாச்சி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் சார்பில், சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம், சேத்துமடை அண்ணா நகரில் நடந்தது.குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற கோவை மாவட்ட நீதிபதி பாலு தலைமை வகித்தார். ஆனைமலை மகாத்கா காந்தி ஆசிரமம் நிர்வாக அறங்காவலர் மற்றும் சட்ட உதவி வக்கீல் ரங்கநாதன்

சட்ட உதவி, விழிப்புணர்வு முகாம்பொள்ளாச்சி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம் சார்பில், சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம், சேத்துமடை அண்ணா நகரில் நடந்தது.குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற கோவை மாவட்ட நீதிபதி பாலு தலைமை வகித்தார். ஆனைமலை மகாத்கா காந்தி ஆசிரமம் நிர்வாக அறங்காவலர் மற்றும் சட்ட உதவி வக்கீல் ரங்கநாதன் வரவேற்றார். பொள்ளாச்சி வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர், பொள்ளாச்சி சார்பு நீதிபதி பாலமுருகன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபாஷினி, பொள்ளாச்சி ஜே.எம்., கோர்ட் எண் - 2 மாஜிஸ்திரேட் செல்லையா ஆகியோர் பேசினர்.இதில், 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீதிபதிகள் பேசினர். வக்கீல் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.அரசு அலுவலகத்தில் அட்டகாசம்பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில், கோர்ட்டுகள், புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த வளாகத்தின் வடக்கு பகுதியில், ரோடு விரிவாக்கத்துக்காக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, பாதுகாப்பற்ற நிலையில் பல மாதங்களாக உள்ளன. இதனால், யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து செல்லும் சூழல் நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி, அலுவலக நேரம் முடிந்த பின், இரவு நேரங்களில் அத்துமீறி உள்ளே வரும் நபர்கள், தாலுகா அலுவலகத்தின் பின்பகுதியில் அமர்ந்து மது அருந்தி, காலி பாட்டில்களை மறைவாக வீசிச் செல்கின்றனர்.முக்கியமான அரசு அலுவலக வளாகத்தில், இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடப்பதும், அதை அதிகாரிகள் கண்காணித்து கட்டுப்படுத்தாமல் இருப்பது, வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.முன்மண்டபம் கட்ட பூமி பூஜைபொள்ளாச்சி ஐயப்பன் கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி, திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக, கோவில் முன்மண்டபம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைத்து திருப்பணிகளும் நிறைவு பெற்றதும், கோவில் கும்பாபிேஷக பணிகள் துவங்கும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.காணுமிடமெல்லாம் குப்பை!ஆனைமலை அடுத்த கோட்டூர் பேரூராட்சியில், 21 வார்டுகளில், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.பேரூராட்சிக்கு உட்பட்ட, 240க்கும் மேற்பட்ட வீதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, கழிவுகளில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வந்தன.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக, இந்திரா நகர், அருணாச்சலம் நகர், பழனியூர், குமரன்கட்டம், பொங்காளியூர் உள்பட, பேரூராட்சியின் பல பகுதிகளில், பணியாளர்கள் முறையாக குப்பையை தரம் பிரித்து சேகரிப்பது இல்லை.இதனால், மக்கள் ரோட்டோரத்தில் குப்பையை வீசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பேரூராட்சி முழுவதிலும் காணும் இடமெல்லாம், குப்பை குவிந்து அதில் மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் நிலவுகிறது. மக்கள் தொற்று பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.அலட்சியமாக உள்ள பேரூராட்சியினர், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.ரோட்டை விரிவுபடுத்த கோரிக்கைஉடுமலை அருகே, குறிச்சிக்கோட்டையிலிருந்து, கொமரலிங்கம் செல்லும் ரோடு, நெடுஞ்சாலைத்துறையால், மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.கேரளா மாநிலம் மூணாறு, மறையூர் உட்பட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், உடுமலை வராமல், குறிச்சிக்கோட்டை, கொமரலிங்கம், நெய்க்காரபட்டி வழியாக பழநிக்கு செல்ல இந்த வழித்தடம் பயன்படுகிறது.பல ஆண்டுகளாக இந்த ரோடு முழுமையாக விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. பல இடங்களில், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு, விலகிச்செல்ல முடியாத அளவுக்கு, ரோடு குறுகலாக உள்ளது. இடைவழித்தடமாக உள்ள ரோட்டை, மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதே போல், குறிச்சிக்கோட்டை, குருவப்பநாயக்கனுார் பகுதியிலுள்ள அபாய வளைவுகள் விபத்து பகுதியாக மாறியுள்ளன. எனவே, இந்த ரோட்டை முழுமையாக விரிவுபடுத்தினால் விபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், பழநிக்கு மாற்றுப்பாதையாகவும், அமையும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தென்னையில் ஊடுபயிராக பூசணி சாகுபடிமடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் தென்னை சாகுபடி உள்ளது. தற்போது பல நூறு ஏக்கர் பரப்பில் தென்னங் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.இது பல ன் தர ஐந்து ஆண்டுகளாகும். இதனால், இதற்கு இடையில், ஊடுபயிராக பூசணி சாகுபடி நடந்துள்ளது. விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய, 900 கிராம் விதை தேவைப்படுகிறது. 18 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. மூன்று மாதங்கள் கடந்த பின்பு பூசணிக்காய் அறுவடையைத் தொடங்கலாம்.அதிகப்பட்சமாக ஒரு ஏக்கருக்கு, 15 டன் வரை சாகுபடி கிடைக்கும். நன்கு வளர்ச்சியடைந்த பூசணி 3 முதல் 5 கிலோ வரை எடை இருக்கும். ஒரு ஆண்டு வரை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம் என்பதால், இது நம்பிக்கையான சாகுபடியாக உள்ளது. தற்போது சாகுபடி செய்யப்பட்ட பயிரை தை மாதம் அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, கூறினர். 'குடி'மகன்களால் தொல்லை உடுமலை பசுபதி வீதியில், மத்திய கூட்டுறவு வங்கி, அர்பன் வங்கி உட்பட அரசு அலுவலகங்களும், பல்வேறு வணிக கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இவ்வீதியில், அரசு அலுவலகங்கள் அருகில், நெரிசலான இடத்தில், 'டாஸ்மாக்' மதுக்கடையும் செயல்பட்டு வருகிறது. இரவு நேரத்தில், 'குடி'மகன்கள் அட்டகாசத்தால், அவ்வழியாக யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், அலுவலகங்களின் முன், வீடுகளின் முன், காலி மதுபாட்டில்களை வீசி சென்று விடுகின்றனர். இதனால், அவ்வழியாக செல்லும், மக்களும், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, பசுபதி வீதியில், இயங்கி வரும், 'டாஸ்மாக்' மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சுரங்க பாதையில் விபத்து அபாயம்உடுமலை தளி ரோடு மேம்பாலத்தை ஒட்டி, அமைக்கப்பட்ட அணுகுசாலையில், ரயில்வே சுரங்க பாதை உள்ளது. முன்பு, மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற, மோட்டார் அறை பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது, தண்ணீர் முறையாக வெளியேற்றப்படாமல், தண்ணீர் ஓடுதளம் முழுவதுமாக தேங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறியபடி செல்ல வேண்டியுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதியை விட்டு, குறுகலான இடத்தில், அனைத்து வாகனங்களும் கடக்க முயற்சிப்பதால், விபத்துகள் ஏற்படுகிறது.சுரங்கப்பாதையை கடக்கும் போது, முகப்பு விளக்குகளை எரிய விட வேண்டும் என்ற விழிப்புணர்வும் வாகன ஓட்டிகளிடையே இல்லை. ஏற்கனவே இருளடைந்து காணப்படும் பகுதியில், தாறுமாறாக வாகனங்கள் செல்வது சிக்கலை அதிகரிக்கிறது. எனவே, சுரங்க பாதையில், மழை நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்; மின்விளக்குகள் அமைத்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X