செய்தி செய்தி

தமிழ்நாடு

வெண்டையை தாக்கும் பூச்சி, நோய்கள்: தடுப்பு வழிமுறைகள் என்னென்ன

Added : நவ 15, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: வெண்டை பயிரை தாக்கும் பூச்சி, நோய்களில் இருந்து காக்கும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துறை அறிவுரை வழங்கியுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் தனிப்பயிராகவும், இளம் தென்னங்கன்றுகளுக்கு மத்தியில் ஊடுபயிராகவும் வெண்டைக்காய் சாகுபடி நடக்கிறது. வெண்டையை தாக்கும் முக்கிய பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்
 வெண்டையை தாக்கும் பூச்சி, நோய்கள்:  தடுப்பு வழிமுறைகள் என்னென்ன



பொள்ளாச்சி: வெண்டை பயிரை தாக்கும் பூச்சி, நோய்களில் இருந்து காக்கும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துறை அறிவுரை வழங்கியுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் தனிப்பயிராகவும், இளம் தென்னங்கன்றுகளுக்கு மத்தியில் ஊடுபயிராகவும் வெண்டைக்காய் சாகுபடி நடக்கிறது.
வெண்டையை தாக்கும் முக்கிய பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வசுமதி ஆலோசனை வழங்கியுள்ளனர்.அவர் கூறியதாவது:காய்த்துளைப்பான்வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாக காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த முறைகளை மேற்கொள்ள வேண்டும். ெஹக்டேருக்கு, 12 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறி வைக்கவேண்டும்.காய்ப்புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை அவ்வப்போது சேகரித்து அழித்துவிட வேண்டும். முட்டை ஒட்டுண்ணியான 'ட்ரைக்கோகிரம்மா' ெஹக்டேருக்கு ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும்.வேப்பம் கொட்டைப் பொடி, 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளித்தால், காய் புழுக்கள் கட்டுப்படும்.விதைக்கும் போதே, ெஹக்டேருக்கு, 400 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டால், பயிர் வளரும் போது, நுாற்புழு தாக்குதல் இருக்காது.மஞ்சள் தேமல்கோடைக்காலத்தில் இந்நோய் அதிகளவில் தாக்கும். இந்நோய் வெள்ளை ஈக்களால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது.
இப்பூச்சியை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு, இரண்டு மி.லி., வேப்பெண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அதிகமிருந்தால், விவசாயிகள் அந்தந்தப்பகுதி தோட்டக்கலை துறை அலுவலர்களிடம் ஆலோசனை பெற்று, பரிந்துரைக்கும் மருந்துகளை, பரிந்துரைக்கும் அளவுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X